ரூ. 7 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கிய 'தல' வில்லன்

By Siva

Recommended Video

Super Star Vijay : விஜய் அம்மா ஷோபா எழுதிய கவிதை | Today's Tea Vadai Pechu

மும்பை: பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் வாங்கியுள்ளார்.

பாலிவுட் படங்களில் நடிப்பதுடன், தயாரிக்கவும் செய்து வருகிறார் அஜய் தேவ்கன். ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள தல 60 படத்தில் அஜய் தேவ்கன் தான் வில்லன் என்று கூறப்படுகிறது. தல 60 படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜய் தேவ்கனின் மைதான் படத்தையும் தயாரிக்கிறார். மைதான் படத்தில் அஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

Ajay Devgan buys Rolls Royce Cullinan

அஜய் தேவ்கனுக்கு கார் என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் அவர் ரூ. 6.95 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் வாங்கியுள்ளார். அஜய் தேவ்கனின் வீட்டில் ஏற்கனவே நிறைய விலை உயர்ந்த மற்றும் சொகுசு கார்கள் உள்ளன.

அஜய் தேவ்கன் ஏற்கனவே குவாட்ராபோர்ட், மினி கூப்பர், பிஎம்டபுள்யூ 5 சீரீஸ், மெர்சிடீஸ் பென்ஸ் எஸ் கிளாஸ், அவ்டி க்யூ7, மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ், டொயோட்டா செலிகா மற்றும் பல கார்கள் வைத்துள்ளார்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவ்டி காரை வென்றார் அவர். அஜய் தனாஜி- தி அன்சங் வாரியர் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவரின் மனைவி கஜோல் மற்றும் சயிப் அலி கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஓம் ரவ்த் இயக்கி வரும் தனாஜி படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர். உள்ளிட்டோர் நடித்து வரும் ஆர். ஆர். ஆர். தெலுங்கு படத்தில் அஜய் தேவ்கன் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்.

நம்ம சூர்யா நடித்த சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்தபோது அதிய் அஜய் தேவ்கன் தான் ஹீரோவாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை போன்றே இந்தியிலும் சிங்கத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X