முதலில் சல்மானுக்கு ரூ.500 கோடி, இப்போ அஜய் தேவ்கனுக்கு ரூ.400 கோடி: ஸ்டார் இந்தியா அதிரடி
மும்பை: ஸ்டார் இந்தியா நெட்வொர்க் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
பாலிவுட்டில் ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் பட்டியலில் அஜய் தேவ்கனின் 4 படங்கள் அடக்கம். மனிதர் சத்தமில்லாமல் ஹிட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி நிறுவனம் அஜய் தேவ்கனை வளைத்துப் போட்டுள்ளது. அதாவது வரும் 2017ம் ஆண்டு வரை அவரது படங்களை ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது.

அஜய்க்கு ரூ.400 கோடி
இன்னும் 5 ஆண்டுகளுக்கு அஜய் தேவ்கனின் படங்களை ஒளிபரப்ப சாட்டிலைட் உரிமையை ஸ்டார் இந்தியா நெட்வொர்க் ரூ.400 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.

சல்மானுக்கு ரூ.500 கோடி
சல்மான் கானின் படங்களை ஒளிபரப்பும் சாட்டிலைட் உரிமத்தை ஸ்டார் இந்தியா நெட்வொர்க் ரூ. 500 கோடி கொடுத்து வாங்கியது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு சல்மான் கான் படங்களை ஸ்டார் இந்தியா தான் ஒளிபரப்பும்.

ஹிம்மத்வாலா, சிங்கம், சத்யாகிரஹா
அஜய் தேவ்கன், தமன்னா நடித்துள்ள ஹிம்மத்வாலா இம்மாத இறுதியில் ரிலீஸ் ஆகிறது. இதையடுத்து பிரகாஷ் ஜா இயக்கத்தில் அஜய் நடிக்கும் சத்யாகிரஹா வெளியாகிறது. அதன் பிறகு அவர் சிங்கம் 2, பிரபுதேவாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











