மனைவி தனுஷுக்கு வில்லி.. கணவர் அஜித்துக்கு வில்லன்... தல 60 ஹாட் அப்டேட்!

தல 60 படத்தில் அஜித்துக்கு வில்லனாக அஜய் தேவ்கன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Super Star Vijay : விஜய் அம்மா ஷோபா எழுதிய கவிதை | Today's Tea Vadai Pechu

சென்னை: தல 60 படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இணைந்திருக்கிறார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இப்படம் லாபகரமான படமாக அமைந்துள்ளது.

Ajay Devgan to play antagonist in Thala 60

எச்.வினோத், அஜித், போனி கபூர் கூட்டணி மீண்டும் இணைகிறது. இந்த படம் அஜித்தின் 60வது படமாகும். எனவே இதற்கு தற்காலிகமாக தல 60 அல்லது ஏகே 60 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கும் என போனி கபூர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

தல 60 படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் அஜித் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை குறைத்துபிட்டாகி இருக்கிறார். அதேசமயம், அஜித் இதில் கார் ரேசராக நடிக்கிறார் எனும் தகவலும் உலாவுகிறது.

Ajay Devgan to play antagonist in Thala 60

இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விவேகம் படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது தல 60 படத்துக்கு போனி கபூர் அஜய் தேவ்கனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.

அஜய் தற்போது ராஜாமவுலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து வருகிறார். கமலின் இந்தியன் 2 படத்தில் நடிக்கவும் அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தேதி இல்லாத காரணத்தால் அவரால் அதில் நடிக்க முடியவில்லை என தெரிகிறது. கமலுக்கு வில்லனாகாவிட்டாலும், அஜித்துக்கு வில்லனாகி நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் அஜய் தேவ்கன். இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X