twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லோகேஷ் கனகராஜ் அடுத்த புராஜெக்ட்டில் பிஸி... 'கைதி' இந்தி ரீமேக்கை இவர்தான் இயக்கப் போறாராமே?

    By
    |

    சென்னை: கைதி படத்தின் இந்தி ரீமேக்கை புதுமுகம் ஒருவர் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது.

    Recommended Video

    ArjunDas Debut as Hero | A for Apple | Andhagaram

    கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்த படம், கைதி.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

    தியேட்டர்களை தெறிக்க விட்ட தெறி.. ரிலீசாகி இன்றுடன் 4 வருஷம் ஆகுது.. கொண்டாடும் ரசிகர்கள்!தியேட்டர்களை தெறிக்க விட்ட தெறி.. ரிலீசாகி இன்றுடன் 4 வருஷம் ஆகுது.. கொண்டாடும் ரசிகர்கள்!

    லோகேஷ் கனகராஜ்

    லோகேஷ் கனகராஜ்

    மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கில் டப் செய்து வெளியிடப்பட்டது. அங்கும் ஹிட்டானது. கதாநாயகி இல்லாமல் உருவான இந்தப் படத்தின் வெற்றி, திரையுலகினரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

    இந்தியில் கைதி

    இந்தியில் கைதி

    இந்தப் படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் கைதி படத்தைத் தயாரிக்கின்றனர். இதில் முன்னணி ஹீரோ ஒருவர் நடிப்பார் என்று கூறப்பட்டது.

    ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த்

    இந்நிலையில் பிரபல இந்தி ஹீரோ அஜய் தேவ்கன் நடிப்பது உறுதியானது. இந்தி ரீமேக்கையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால், அடுத்து கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை அவர் இயக்க இருக்கிறார் என்கிறார்கள். இதனால் இந்தி பட டைரக்டர் ஒருவர் இதை ரீமேக் செய்வார் என்று கூறப்பட்டது.

    தர்மேந்திர சர்மா

    தர்மேந்திர சர்மா

    இந்நிலையில், பிரபல எடிட்டரும் தனது உறவினருமான தர்மேந்திர சர்மாவை, இந்தப் படத்தின் இயக்குனராக்க முடிவு செய்துள்ளாராம், அஜய்தேவ்கன். தர்மேந்திர சர்மா, பல இந்தி படங்களுக்கு எடிட்டிங் செய்துள்ளார். அஜய்தேவ்கன் நடித்துள்ள படங்களுக்கும் எடிட் செய்துள்ளார். அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து இந்த வாய்ப்பை அவருக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

    கொரோனா

    கொரோனா

    சமீபகாலமாக, அதிக அனுபவம் இல்லாத இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார் அஜய்தேவ்கன். அந்த அடிப்படையில் அவரை அறிமுகப்படுத்த நினைத்துள்ளார் என்கிறார்கள். ஆனால், இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல், கொரோனா பிரச்னைகள் முடிவுக்கு வந்த பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    English summary
    Sources said, film Editor Dharmendra Sharma may direct Ajay devgn in Kaithi hindi remake
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X