காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. கொரோனா காலத்துல 60 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய அஜய் தேவ்கன்!

மும்பை: கொரோனா காலத்துல ரேட் கொஞ்சம் கம்மியா கிடைக்கிறதால பாலிவுட் பிரபலங்கள் வரிசையாக புதிய வீடுகளாக வாங்கிப் போட்டு வராங்க..

ஆலியா பட், அமிதாப் பச்சன், சன்னி லியோன் எல்லாம் சமீபத்தில் புதிய வீடு வாங்கிய நிலையில், தற்போது 60 கோடி ரூபாய்க்கு சொகுசு பங்களாவை நடிகர் அஜய் தேவ்கன் வாங்கி உள்ளாராம்.

கொரோனா காலம் என்பதால், ஒரிஜினல் ரேட்டை விட குறைந்த விலைக்கு இந்த டீலை அவர் ஓகே செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அஜய் தேவ்கன் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். நடிகை கஜோலின் கணவரான இவர் தற்போது பாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் மும்பையின் காஸ்ட்லி பகுதியான ஜூஹுவில் பழைய பங்களா ஒன்றை வாங்கி உள்ளார்.

60 கோடிக்கு

60 கோடிக்கு

மறைந்த பிரபல பணக்காரர் புஷ்பா வலியாவின் பங்களாவை நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்து வந்த நடிகர் அஜய் தேவ்கன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்த பங்களாவை வாங்கும் பணியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் தான் அந்த பங்களா அஜய் தேவ்கன் கைக்கு வந்துள்ளது. அதன் விலை 60 கோடி ரூபாயாம்.

காற்றுள்ள போதே

காற்றுள்ள போதே

கொரோனா காலம் என்பதால் 70 கோடி மதிப்பிலான அந்த பங்களாவை நடிகர் அஜய் தேவ்கன் 60 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களின் பார்வையும் தற்போது நடிகர் அஜய் தேவ்கன் மீது தானாம். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது அஜய் தேவ்கனுக்கு சரியாக பொருந்துகிறது.

இரண்டாவது பங்களா

இரண்டாவது பங்களா

பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன், தர்மேந்திரா மற்றும் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் வசித்து வரும் அந்த ஜூஹுவில் ஏற்கனவே ஒரு சொகுசு வீட்டில் நடிகர் அஜய் தேவ்கன் தனது மனைவி கஜோல் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியில் தற்போது இரண்டாவது பங்களாவை அஜய் தேவ்கன் சொந்தமாக்கி உள்ளார்.

தனி விமானம்

தனி விமானம்

கடந்த 2008ம் ஆண்டே தனது சொந்த தேவைகளுக்காக தனி விமானம் ஒன்றையும் நடிகர் அஜய் தேவ்கன் வாங்கி ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களையும் வாயடைக்க வைத்தார். மேலும், வெளிநாடுகளிலும் சில பங்களாக்களும் மற்றும் விலை உயர்ந்த சொகுசு கார்களையும் அஜய் தேவ்கன் வாங்கி வைத்துள்ளார்.

அமிதாப், சன்னி லியோன்

அமிதாப், சன்னி லியோன்

சமீபத்தில் தான் நடிகர் அமிதாப் பச்சன் 31 கோடிக்கு புதிய குடியிருப்பு ஒன்றை வாங்கிய செய்தி பாலிவுட்டில் வைரலானது. மேலும், அதே குடியிருப்பில் நடிகை சன்னி லியோனும் ஒரு குடியிருப்பை வாங்கி இருந்தது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அஜய் தேவ்கன் ஒரு பங்களாவை வாங்கி உள்ளது பாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X