விவசாயிகள் போராட்டத்துக்கு ஏன் ஆதரவு கொடுக்கல.. அஜய் தேவ்கன் காரை வழிமறித்த இளைஞர் கைது

மும்பை: வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏன் குரல் கொடுக்கவில்லை என நடிகர் அஜய் தேவ்கனின் காரை வழிமறித்து கேள்வி எழுப்பிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சுமார் 15 நிமிடங்கள் அந்த இளைஞர் சாலையில் அஜய் தேவ்கனின் காரை வழிமறித்து, விரல் நீட்டி கேள்வி கணைகளை தொடுத்தார்.

அஜய் தேவ்கனின் பாடிகார்ட் போலீசாருக்கு போன் செய்த நிலையில், அவர்கள் அந்த இளைஞரை கைது செய்தனர்.

ரிஹானாவுக்கு எதிராக

ரிஹானாவுக்கு எதிராக

ரிஹானாவுக்கு எதிராக உடனடியாக கொந்தளித்து ட்வீட் போட்ட நீங்கள், அதன் பிறகு இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்காக என்ன செஞ்சீங்க, வேளான் சட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை ஏன் என விரலை நீட்டி மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காரில் செல்லும் போது

காரில் செல்லும் போது

இந்நிலையில், நேற்று காலை 10.30 மணிக்கு மும்பை கோராகாவ் பிலிம் சிட்டிக்கு ஷூட்டிங்கிற்காக சென்ற நடிகர் அஜய் தேவ்கனின் காரை திடீரென இளைஞர் ஒருவர் வழி மறித்தார். மேலும், அஜய் தேவ்கனை அங்கிருந்து நகர விடாமல் சுமார் 15 நிமிடங்கள் கேள்விகளால் துளைத்து எடுத்தார்.

ஏன் குரல் கொடுக்கல

ரிஹானாவுக்கு எதிராக உடனடியாக கொந்தளித்து ட்வீட் போட்ட நீங்கள், அதன் பிறகு இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்காக என்ன செஞ்சீங்க, வேளாண் சட்டத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை ஏன் என விரலை நீட்டி மிரட்டும் தொனியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கைது செய்த போலீசார்

கைது செய்த போலீசார்

காரில் இருந்து இறங்காமல் கும்பிடு போட்ட படியே அஜய் தேவ்கன் அந்த இளைஞரை விலக சொல்லியும் அவர் விலகாமல் நின்றதால், அஜய் தேவ்கனின் பாடிகார்ட் வெளியே வந்து அந்த இளைஞரை விலக சொன்னார். அப்போதும் அவர் கேட்காத நிலையில், போலீசாருக்கு போன் செய்ய, விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர். அந்த இளைஞரின் பெயர் ராஜ்தீப் சிங் என்பது தெரியவந்தது.

ஆதரவும் எதிர்ப்பும்

நடிகர் அஜய் தேவ்கனின் காரை வழிமறித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஏகப்பட்ட ட்வீட்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகின்றன. சில நெட்டிசன்கள் தொடர்ந்து பாலிவுட் படங்களை புறக்கணிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர்.

ராஜமெளலி படத்தில்

ராஜமெளலி படத்தில்

நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் பல படங்கள் வெளியாக உள்ளன. இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அஜய் தேவ்கன், பிரியாமணி நடிப்பில் உருவாகி உள்ள மைதான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஆலியா பட்டின் கங்குபாய் காத்தியாவதி மற்றும் அக்‌ஷய் குமாரின் சூர்யவன்ஷி உள்ளிட்ட படங்களிலும் அஜய் தேவ்கன் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X