ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் அட்டகாசமான அறிவிப்பு… இன்றிலிருந்து அஜய் தேவ்கன் ஆட்டம் ஆரம்பம்!

சென்னை: ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஷூட்டிங்கில் இன்று முதல் அஜய்தேவ்கன் இணைகிறார்.

பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான அஜய்தேவ்கன் நடிப்பில் கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியான தானாஜி படம் பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

அந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்துள்ள நிலையில், அஜய் தேவ்கன் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் பட ஷூட்டிங்கில் இன்று முதல் கலந்து கொள்கிறார் என்ற அறிவிப்பை ஆர்.ஆர்.ஆர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உலகத் தரம்

உலகத் தரம்

மகதீரா, நான் ஈ, பாகுபலி என உலகத் தர படங்களை இயக்கி வரும் ராஜமெளலி அடுத்த பிரம்மாண்டமாக ஆர்.ஆர்.ஆர் எனும் சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நாயகர்களாக நடித்து வருகின்றனர்.

ஷங்கருக்கு நோ

ஷங்கருக்கு நோ

மேலும், ஆர்.ஆர்.ஆர் படத்தில் பாலிவுட் ஹீரோவான அஜய்தேவ்கன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தின் வில்லனாக நடிக்க ஷங்கர் அஜய் தேவ்கனை முதலில் அணுகினார். ஆனால், அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக நோ சொல்லிவிட்டார்.

ரிலீஸ் சிக்கல்

ரிலீஸ் சிக்கல்

ஜூன் மாதம் ஆர்.ஆர்.ஆர். படம் ரிலீசாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்டோபர் மாதத்திற்கு ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஆர்.ஆர்.ஆர் படக்குழுவோ அல்லது ராஜமெளலியோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் அறிவிக்கவில்லை.

என்ன கதை?

என்ன கதை?

டோலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படம் போன்று ஆர்.ஆர்.ஆர் படமும் சுதந்திர போராட்ட வீரர்களின் கதை தான். அல்லூரி சீத்தாராம ராஜூ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் விடுதலை போராட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

பான் இந்தியா

பான் இந்தியா

பாகுபலி படம் பாலிவுட்டிலும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தையும் பான் இந்தியா படமாக பல மொழிகளில் ராஜமெளலி இயக்கி வருகிறார். டோலிவுட் ரசிகர்களுக்காக ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் இந்த படத்தில் பாலிவுட் ரசிகர்களை கவர ஆலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் இணைந்துள்ளனர். கோலிவுட்டை கவர் பண்ண சமுத்திரகனி முக்கிய ரோலில் நடித்துள்ளார். ஹாலிவுட் நடிகர்களும் படத்தில் நடித்து வருகின்றனர்.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன், சைஃப் அலிகான் நடிப்பில் சமீபத்தில் வெளியான தானாஜி படம் பல நூறு கோடிகளை வசூலித்துள்ளது. அந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்த நிலையில், இன்று முதல் அஜய் தேவ்கன் ஆர்.ஆர்.ஆர் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இந்த படத்தில் அஜய் தேவ்கனுக்கு முக்கியமான ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X