அஜய் தேவ்கனை டாப்லெஸ்ஸா பார்த்து அசந்துட்டேன்: பிரபுதேவா

By Siva

மும்பை: தன்னுடைய ஆக்ஷன் ஜாக்சன் படத்திற்காக அஜய் தேவ்கனை டாப்லெஸ்ஸாக பார்த்து அசந்துவிட்டதாக பிரபுதேவா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு படங்களை இந்தியில் ரீமேக் செய்வதில் வல்லவர் பிரபுதேவா. அதனாலேயே அவர் படத்தில் நடிக்க சல்மான் கான் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நடிகர்கள் போட்டி போடுகிறார்கள்.

இந்நிலையில் தெலுங்கில் சக்கைபோடு போட்ட தூக்குடு படத்தை ஆக்ஷன் ஜாக்சன் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளார் பிரபுதேவா.

அஜய்

அஜய்

ஆக்ஷன் ஜாக்சன் ஹீரோ அஜய் தேவ்கன் படத்தில் வரும் ஒரு வாள் சண்டை காட்சிக்காக தனது எடையை 17 கிலோ குறைத்துள்ளார்.

பிரபுதேவா

பிரபுதேவா

வாள் சண்டை காட்சிக்காக அஜய் 2 மாதங்களாக தனது உடம்பை கும்மென்று ஆக்கிவிட்டு வந்து சட்டையை கழற்றினார். அவரது உடம்பை பார்த்து அசந்துவிட்டேன் என்றார் பிரபு.

வாள் சண்டை

வாள் சண்டை

வாள் சண்டை என்றால் வெறும் சண்டை இல்லை. எல்விஸ் பிரெஸ்லி போன்று ஆடிக் கொண்டே சண்டை போட வேண்டும்.

ஸ்டண்ட்

ஸ்டண்ட்

ஸ்டண்ட் மாஸ்டரால் பிரபுதேவா கேட்டது போன்று டான்ஸுடன் கூடிய வாள் சண்டையை காட்சிபடுத்த முடியவில்லை. இதை பார்த்த பிரபு தானே ஸ்டண்ட் மாஸ்டராகவும் மாறி அந்த காட்சியை அருமையாக படமாக்கியுள்ளார்.

சோனாக்ஷி

சோனாக்ஷி

ஆக்ஷன் ஜாக்சனுக்காக சோனாக்ஷி சின்ஹாவும் உடல் எடையை குறைத்து சிக்கென்று ஆகியுள்ளார். இந்த படம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை படக்குழுவுக்கு மட்டும் அல்ல பாலிவுட்காரர்களுக்கும் வந்துவிட்டது.

ரிலீஸ்

ரிலீஸ்

ஆக்ஷன் ஜாக்சன் டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆகிறது. படம் ரூ.100 கோடி வசூல் செய்தது என்று செய்தி வந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X