350 கோடி போச்சா.. பில்டப் கொடுத்த அளவுக்கு கல்லா கட்டலையே.. படே மியான் சோட்டே மியான் vs மைதான் வசூல்

மும்பை: போனி கபூர் தயாரிப்பில் வெளியான துணிவு படம் தான் வசூல் நிலவரம் கூட சொல்ல முடியாத அளவுக்கு வாரிசு படத்திடம் அடி வாங்கியது என்று பார்த்தால் அஜய் தேவ்கன் படத்துக்கும் இந்த நிலைமை தானா? என பாலிவுட்டே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நேற்று பாலிவுட்டில் அக்‌ஷய் குமாரின் படே மியான் சோட்டே மியான் மற்றும் அஜய் தேவ்கனின் மைதான் என இரு படங்கள் ஒரே நாளில் மோதின.

Ajay Devgn Maidaan and Akshay Kumar Bade Miyan Chote Miyan started poor at Box Office

ஆனால், இரண்டு படங்களுக்கும் மூக்குடைந்தது தான் மிச்சம் என்றும் பெரிய வசூல் வரவில்லை என ஷாக்கிங் ரிப்போர்ட்டுகள் வெளியாகி உள்ளன. அஜய்தேவ்கன் நடித்து வெளியான ஷைத்தான் திரைப்படம் 200 கோடி வசூல் ஈட்டிய நிலையில், மைதான் திரைப்படத்தின் ஓப்பனிங் கவலைக்கிடமான நிலையில் துவங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

4 வருட போராட்டம்: கீர்த்தி சுரேஷை படத்தில் இருந்து நீக்கி விட்டு பிரியாமணியை வைத்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவான மைதான் திரைப்படம் கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட பல சிக்கல்களை சந்தித்து 4 வருட போராட்டத்திற்கு பிறகு வெளியானது. படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக அந்த படம் ஷைன் ஆகவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மைதான் முதல் நாள் வசூல்: ப்ரீமியர் ஷோவில் 2 கோடி ரூபாயை வசூல் செய்த மைதான் திரைப்படம் நேற்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான நிலையில், முதல் நாளில் வெறும் 5 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறுகின்றனர். ஒட்டுமொத்தமாக 7.10 கோடி ரூபாய் வசூலை மட்டுமே மைதான் திரைப்படம் பெற்றிருப்பது போனி கபூரை கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

மைதான் பட்ஜெட்: அஜய் தேவ்கன் இந்தியாவின் கால்பந்தாட்ட கோச்சான சையது அப்துல் ரஹிம் என்பவரின் பயோபிக்கை தான் படமாக்கி உள்ளனர். ஆனால், ரசிகர்கள் இந்த ஸ்போர்ட்ஸ் படத்துக்கு பெரிதாக ஆர்வம் செலுத்தாத நிலையில், வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். 4 வருஷத்துக்கு முன்னாடி 100 கோடி பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்டு வட்டியெல்லாம் போட்டு கடைசியில் 250 கோடி பட்ஜெட்டுக்கு வந்த நிலையில், முதல் நாள் வசூல் வெறும் 7 கோடி தான் என்றால் என்ன ஆவது.

350 கோடி போச்சு: மைதான் படத்தின் நிலைமை அப்படி என்றால் அக்‌ஷய் குமார், டைகர் ஷெராஃப், மானுஷி சில்லார் மற்றும் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான படே மியான் சோட்டே மியான் திரைப்படத்தின் பட்ஜெட் 350 கோடியாம். ஆனால், ரம்ஜான் விடுமுறையை டார்கெட் செய்து வெளியான அந்த படத்தின் வசூல் வெறும் 15 கோடி ரூபாய் தான் முதல் நாளில் வந்திருப்பதாக கூறுகின்றனர்.

தொடர் தோல்வி: அக்‌ஷய் குமார் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி படுதோல்வியை சந்தித்து வருகின்றன. படே மியான் சோட்டே மியான் படத்தை ரொம்பவே மலை போல நம்பியிருந்தார். ஆனல், இந்த படமும் அவருக்கு பிளாக்பஸ்டர் படமாக அமையாது என்பது தற்போது உறுதியாகி உள்ளது. படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், வசூல் மேலும், குறையும் என தெரிகிறது. நம்ம ஊரில் இந்த ஆண்டு வெளியாகும் பெரிய படங்களுக்கு இந்த நிலைமை வந்தால் என்னவாகும் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X