ராஜமெளலி படத்துக்கு முன்னாடியே அஜய்தேவ்கனை தமிழில் பார்க்கலாம்.. ’மைதான்’ புதிய ரிலீஸ் தேதி இதோ!
மும்பை: பாலிவுட்டின் ஆக்ஷன் ஹீரோவான அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான மைதான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.
அஜய் தேவ்கன் தற்போது படு பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். வருடத்திற்கு இரண்டு முதல் மூன்று படங்கள் வெளியாகின்றன. இந்தி திரையுலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் பல நூறு கோடிகளை வசூல் செய்து வருகின்றன. தற்போது வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் அஜய்.

ஆரம்பமே அமர்களம்
இந்த வருடம் வெற்றியுடன் துவங்கி உள்ளார் அஜய் தேவ்கன் இவரது நடிப்பில் கடந்த ஜனவரி பத்தாம் தேதி Tanhaji என்ற திரைப்படம் வெளிவந்து மெகா ஹிட் ஆனது. சுமார் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளது. இப்படத்தில் இவருடன் கஜோலும் இணைந்து நடித்தார். இப்படம் சுதந்திர போராட்ட வீரர் ஒருவரின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப் பட்டுள்ளது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி இயக்குநர் உடன்
இவர் ராஜமௌலி இயக்கி வரும் #RRR திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் படக்குழு உடன் இணைந்தார். இவரது போஷன்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. அப்புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. ராம் சரண் மற்றும் ஜீனியர் என். டி. ஆர் உடன் இணைந்து நடிக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகவும் முக்கியமானது என்று கூறப்படுகிறது.

பிகில் போல
தமிழில் கடந்த வருடம் விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இப்படம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இப்படம் உலகம் முழுவதும் சுமார் 300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருந்தது. பிகில் படத்தைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் படமும் கால்பந்தாட்டம் குறித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீஸ் தேதி மாற்றம்
அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் மைதான் திரைப்படம் நவம்பர் 27ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் இருந்து நாயகி கீர்த்தி சுரேஷ் நீக்கப்பட்டு, பிரியாமணி சேர்க்கப்பட்டுள்ளார். இதனால், தற்போது இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மைதான் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. .

முதல் முறையாக
ராஜமவுலி இயக்கும் #RRR திரைப்படம் தான் அஜய் தேவ்கன் நடிப்பில் முதலில் தமிழில் வெளியாகும் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படம் இன்னமும் ஷூட்டிங்கை நிறைவு செய்யவில்லை. படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு முன்னதாக அஜய் தேவ்கன் நாயகனாக நடிக்கும் மைதான் படம் தமிழில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











