மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா லோகேஷ் கனகராஜ்?

மும்பை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி பட இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார்.

Recommended Video

Kaithi Hindi Remake | Lokesh Kanagaraj | karthi | Dream Warrior pictures

கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் ரிலீசான கைதி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரும், கைதி படத்தை பாராட்டி இருந்தனர்.

ரித்திக் ரோஷன் இல்லை

ரித்திக் ரோஷன் இல்லை

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே, ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து, பாலிவுட்டில் கைதி திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்திருந்தார். மேலும், ஹீரோவாக ரித்திக் ரோஷன் நடிக்க உள்ளதாக வதந்திகள் பரவின.

சூர்யா – கார்த்தி

சூர்யா – கார்த்தி

பாலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோவான அஜய் தேவ்கன், சூர்யாவின் சிங்கம் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்து, மிகப்பெரிய வெற்றியை பெற்றார். இந்நிலையில், தற்போது, சூர்யாவின் தம்பி கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படத்தை ரீமேக் செய்து நடிக்க உள்ளார். நிச்சயம் இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்றே தெரிகிறது.

செம பிசி

செம பிசி

அஜய் தேவ்கன் நடிப்பில், ஜனவரி மாத தொடக்கத்தில் வெளியான தானாஜி படம் 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து, வெற்றி நடை போடுகிறது. மேலும், ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர், மைதான், கோல்மால் 5 உள்ளிட்ட பல படங்கள் கை வசம் இருக்கின்றன.

அஜய் தேவ்கன் ட்வீட்

கைதி இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ள நிலையில், கோலிவுட் மற்றும் பாலிவுட் ரசிகர்களும், #Kaithi என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், "ஆமா.. தமிழ் படமான கைதி ரீமேக்கில் நான் நடிக்கப் போகிறேன்" என அஜய் தேவ்கனும் ட்வீட் போட்டு உறுதி செய்துள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

மேலும், அஜய் தேவ்கன் தனது ட்வீட்டில், அடுத்த ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி கைதி இந்தி ரீமேக் படம் திரைக்கு வரும் என்றும் பதிவிட்டுள்ளார். ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீசாக உள்ள நிலையில், பேக் டு பேக் படங்களை கொடுத்து அசத்த உள்ளார் அஜய் தேவ்கன்.

இயக்குநர் யார்?

இயக்குநர் யார்?

மாநகரம் படத்தை இயக்கி வெற்றி பெற்ற லோகேஷ் கனகராஜ், கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்து, தற்போது, விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். ஆனால், இந்தி கைதி படத்தை யார், இயக்கப் போறாங்க, என்ற அறிவிப்பை இதுவரை படக்குழு வெளியிடவில்லை. ஒருவேளை லோகேஷ் கனகராஜுக்கே அந்த வாய்ப்பு கிடைத்தால், ஜாக்பாட் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X