என்னது அஜய் தேவ்கன் மகளுக்கு கொரோனா பாதிப்பா.. பரபரப்பான பாலிவுட்.. என்ன ஆச்சு?
மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் மகள் நைசாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, கிளம்பிய வதந்திகளுக்கு, ட்விட்டர் பதிவு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஜய் தேவ்கன்.
Recommended Video
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான தானாஜி வெற்றியை ருசித்த அஜய் தேவ்கன், அடுத்ததாக, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்திலும், மைதான் எனும் கால்பந்தாட்ட படத்திலும் நடித்து வருகிறார்.
50 வயதாகும் அஜய் தேவ்கனின் 16 வயதான மகள் நைசாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ஆன்லைன் போர்ட்டல் ஒன்று பரப்பிய வதந்தி பாலிவுட்டை பீதியடைய வைத்துள்ளது.

அஜய் - கஜோல்
பாலிவுட் நடிகர்களான அஜய் தேவ்கன் மற்றும் கஜோல் தம்பதியினரின் 16 வயது மகளான நைசா தேவ்கனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாக தகவல்கள் பரவின. நடிகை கஜோல் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இந்த விஷம வதந்தி வேகமாக பரவியது.

சிங்கப்பூரில் இருந்து
அஜய் தேவ்கனின் மகள் நைசா சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் தனது மேல் படிப்பை படித்து வருகிறார். அண்மையில், மகளை காண சிங்கப்பூர் சென்றிருந்த கஜோல், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடிய நிலையில், மகளுடன் மும்பை வந்தடைந்தார்.

கொரோனா வைரஸ்
வெளிநாட்டில் இருந்து நடிகை கஜோல் மற்றும அவரது மகள் இந்தியாவுக்கு வந்த நிலையில், சமீபத்தில் மகளை அழைத்துக் கொண்டு உடல் நிலை சரியில்லை என மருத்துவமனைக்கு கஜோல் சென்ற விஷயத்தை மோப்பம் பிடித்த அந்த ஆன்லைன் போர்ட்டல், கஜோல் மகளுக்கு கொரோனா பாதிப்பு என்ற வதந்தியை கட்டவிழ்த்து விட்டது.
அஜய் தேவ்கன் மறுப்பு
இந்த விஷயம் வைரலாகவே அனைத்து மீடியாக்களும், செய்தி ஆக்கிவிடக் கூடாது என்பதற்காக, தனது ட்விட்டர் பக்கத்தில், அது முற்றிலும் போலியான செய்தி, மனைவியும் மகளும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி, எனது குடும்பத்துக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











