அதள பாதாளத்தில் அஜய் தேவ்கன் பட வசூல்.. ’இந்தி’ புரமோஷன் எடுபடவில்லையா? நின்னு பேசும் கேஜிஎஃப் 2!
மும்பை: அமிதாப் பச்சன், அஜய் தேவ்கன் நடிப்பில் நேற்று வெளியான ரன்வே 34 திரைப்படத்தின் முதல் நாள் வசூலை கேஜிஎஃப் 2 மூன்றாவது வாரத்தில் முந்தியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
டம்மி துப்பாக்கியை வைத்து இதுவரை வித்தைக் காட்டிக் கொண்டிருந்த பாலிவுட் நடிகர்களை கேஜிஎஃப் 2 கலாஷ்நிக்காவோ துப்பாக்கிக் கொண்டு வந்து சுட்டால் என்ன ஆகும் என்பது போல பாலிவுட் நிலைமை ரொம்பவே பரிதாபத்திற்குள் ஆளாகி உள்ளது.
இந்தி தான் தேசிய மொழி என அஜய் தேவ்கன் ரசிகர்களை கவர பார்த்தாலும், முதல் நாளில் அந்த படத்தை பார்க்க தியேட்டருக்கு கூட்டமே வரவில்லை என்பது தான் சோகக் கதை.

பிரபலங்கள் மட்டும் பாராட்டு
அஜய் தேவ்கன், அமிதாப் பச்சன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் நேற்று வெளியான ரன்வே 34 திரைப்படம் வெளியாகும் முன்பாகவே பிரபலங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் போடப்பட்டது. அந்த படத்தை பார்த்து விட்டு வரிசையாக பாலிவுட் பிரபலங்கள் அஜய் தேவ்கனை பாராட்டி தள்ளி இருந்தனர். ஆனாலும், அது முதல் நாளில் படத்திற்கு பெரிய வசூலை பெற்றுத் தராமல் போய் விட்டது தான் நம்ப முடியாத உண்மையாக மாறி உள்ளது.

புரமோஷனுக்காக இந்தி பற்றா?
கன்னட திரைப்பட விழாவில் கேஜிஎஃப் 2 வெற்றியை பாராட்டும் விதமாக பேசிய கிச்சா சுதீப் 'இந்தி தேசிய மொழி இல்லை' எனக் கூறியிருந்தார். மற்ற பாலிவுட் நடிகர்கள் எல்லாம் அமைதியாக இருந்த நிலையில், பட ரிலீஸை கையில் வைத்திருக்கும் அஜய் தேவ்கன் இதுதான் சான்ஸ் என நினைத்து கிச்சா சுதீப்பை டேக் செய்து, "இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் இந்தியில் உங்கள் மொழி படங்களை டப் செய்து வெளியிடுறீங்க" எனக் கேட்க பாலிவுட் ரசிகர்கள் முதற்கொண்டு அஜய் தேவ்கனுக்கு பான் மசாலா ஸ்டார் பட்டம் கட்டி அட்வைஸ் பண்ண ஆரம்பித்து விட்டனர்.

அதளபாதாளத்தில் முதல் நாள் வசூல்
அஜய் தேவ்கனின் ரன்வே 34 திரைப்படம் முதல் நாளில் வெறும் 3.5 கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக வெளியான ஜெர்ஸி திரைப்படம் 4 கோடி ரூபாயை முதல் நாளில் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் தோல்வி படமாக மாறியது. இந்நிலையில் அஜய் தேவ்கன் படத்திற்கும் அப்படியொரு மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆலியா பட்டின் கங்குபாய் கத்தியாவாடி படமே முதல் நாளில் 10 கோடி ரூபாய் வசூலை அள்ளி இருந்தது.

மூன்றாவது வாரத்திலும் ராக்கிங்
இதில், என்னவொரு வேடிக்கையான விஷயம் என்றால், முதல் நாளில் இந்தி பெல்ட்டில் 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த கேஜிஎஃப் 2 திரைப்படம் நேற்று 4.5 கோடி ரூபாயை இந்தி பெல்ட்டில் வசூல் செய்து அஜய் தேவ்கனுக்கு அப்படியொரு அடி கொடுத்திருப்பது தான் ஒட்டுமொத்த பாலிவுட் உலகையும் ஆத்திரத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஹீரோபன்டி 2 வசூல்
அஜய் தேவ்கன் படத்திற்கு போட்டியாக பாலிவுட்டில் வெளியான டைகர் ஷெராஃப்பின் ஹீரோபன்டி 2 திரைப்படம் முதல் நாளில் 7.5 கோடி வரை வசூல் செய்து நல்ல தொடக்கத்தை ஆரம்பித்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிற மொழி படங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை படாமல் நம் மொழியில் நல்ல படங்களை இயக்கினால் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் திறமை பாலிவுட்டுக்கு மட்டுமில்லை அனைத்து இந்திய மொழி படங்களுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











