எத்தனை அன்சங் ஹீரோ.. அஜய் தேவ்கனின் தன்ஹாஜி டிரைலர் ரிலீஸ்!
மும்பை: அஜய் தேவ்கன், சைஃப் அலி கான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தன்ஹாஜி படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
அசுதோஷ் கவாரிகர் இயக்கத்தில் உருவாகியுள்ள பானிபட் படத்தின் பிரம்மாண்ட டிரைலர் அண்மையில் பாலிவுட்டை கலக்கிய நிலையில், அடுத்ததாக அஜய் தேவ்கன் மற்றும் சைஃப் அலி கானின் தன்ஹாஜி டிரைலர் வரலாற்று பட ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த வரலாற்று படம் 2020 ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருகிறது.

அன்சங் ஹீரோ
இந்தியா முழுவதும் ஸ்போர்ட்ஸ் பயோபிக் படங்களும், கண்டு கொள்ளப்படாத சுதந்திர போராட்ட வீரர்களின் படங்களும் பயங்கர பொருட்செலவில் சிஜி உதவியுடன் வரிசையாக எடுத்து தள்ளப்பட்டு வருகிறது. சைரா நரசிம்ம ரெட்டி, தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், ஆர்.ஆர்.ஆர், பானிபட், பத்மாவத் என பல பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன. ஆனால், இதில், சில படங்கள் மட்டுமே வெற்றியை பெறுகின்றன.
தன்ஹாஜி
சத்திரபதி சிவாஜியின் வீரம் மிக்க படைத்தளபதி தன்ஹாஜி, முகலாய ஆட்சியாளர்களுக்கு எதிராக நடத்திய போர்கள் இந்திய சுதந்திர போராட்ட சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கின்றன. வீர சிவாஜி குறித்த படங்கள் பாலிவுட்டில் வந்த நிலையில், அவரது படை தளபதியான தன்ஹாஜி குறித்த சரித்திர படமாக அஜய்தேவ்கனின் தன்ஹாஜி உருவாகியுள்ளது.
டிரைலர் எப்படி இருக்கு
பாகுபலி, தக்ஸ் ஆஃப் இந்தோஸ்தான், சைரா நரசிம்ம ரெட்டியை போல இந்த டிரைலரும் போர் காட்சிகள் நிறைந்து காணப்படுகிறது. அஜய் தேவ்கன் மற்றும் சைஃப் அலி கானின் அசத்தல் நடிப்பு மற்றும் பிரம்மாண்ட அரங்குகள் ஒவ்வொரு ஃபிரேமிலும் பிரமிப்பை கொடுக்கின்றன. வீர சிவாஜியாக பாலிவுட் நடிகர் ஷரத் கேல்கர் சிறப்பாக நடித்துள்ளார். தன்ஹாஜியின் மனைவியாக கஜோல் நீண்ட நாட்களுக்கு பிறகு பாலிவுட்டில் கம்பேக் கொடுத்துள்ளார்.

பாலிவுட் சிம்மாசனம்
அஜய் தேவ்கன் எவ்வளவு தான் முயற்சி செய்தாலும், பாலிவுட்டின் முன்னணி நடிகர் பட்டியலில் பெரிதாக இடம்பெற முடியவில்லை. தன்ஹாஜி, ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர்., கீர்த்தி சுரேஷுடன் அஜய் தேவ்கன் நடிக்கும் மைதான் என அடுத்தடுத்து அவரது நடிப்பில் வெளியாகவுள்ள பிரம்மாண்ட படங்களால் பாலிவுட் சிம்மாசனத்தை அஜய் தேவ்கன் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











