twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தி தேசிய மொழி இல்லை.. கிச்சா சுதீப் பேச்சால் கடுப்பான அஜய் தேவ்கன்.. என்ன சொல்லிட்டாரு தெரியுமா?

    |

    மும்பை: கேஜிஎஃப் 2 வெற்றி குறித்து விழா ஒன்றில் பேசிய நடிகர் கிச்சா சுதீப் இனிமேலும், இந்தி மொழியை தேசிய மொழியென யாரும் சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

    இதனால், கடுப்பான பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கு போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை தொடர்ந்து கன்னட திரையுலகில் இருந்தும் இந்தி திணிப்புக்கு எதிரான வலுவான கருத்து எழுந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    என்ன சொல்றீங்க...தளபதி 66 படத்தில் விஜய் இதை செய்யவே மாட்டாரா...அப்புறம்? என்ன சொல்றீங்க...தளபதி 66 படத்தில் விஜய் இதை செய்யவே மாட்டாரா...அப்புறம்?

    இந்தி தேசிய மொழியா

    இந்தி தேசிய மொழியா

    வட இந்தியாவை எடுத்துக் கொண்டாலே இந்தி, வங்காளம், பஞ்சாபி, குஜராத்தி என ஊருக்கு ஒரு மொழி பேசப்பட்டு வருகிறது. அதே போல, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய நாட்டில் இந்தியை மட்டும் தேசிய மொழி என திணிப்பதால் தான் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    ஏ.ஆர். ரஹ்மான் எதிர்ப்பு

    ஏ.ஆர். ரஹ்மான் எதிர்ப்பு

    சமீபத்தில், இந்தி மொழியை ஆட்சி மொழியாக மாற்ற வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழணங்கு எனும் தமிழ் அன்னையின் போஸ்டர் ஒன்றை இசைப்புயல் வெளியிட்டு இருந்தார். மேலும், அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழ் தான் இணைப்பு மொழியாக இருக்க முடியும் என நச்சென பதிலடி கொடுத்து இருந்தார்.

    இந்தி கிடையாது

    இந்தி கிடையாது

    கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்தி பெல்ட்டிலும் 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பாலிவுட் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியது. இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியை பற்றி 'R: The Deadliest Gangster Ever' பட விழாவில் பேசிய நடிகர் கிச்சா சுதீப், இனியும் இந்தியை யாரும் தேசிய மொழியென சொல்லிக் கொண்டு திரிய வேண்டாம் எனக் கூறியுள்ளார். அது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

    அஜய் தேவ்கன் எதிர்ப்பு

    அஜய் தேவ்கன் எதிர்ப்பு

    ரன்வே 24 படத்தின் ரிலீசுக்காக புரமோஷனில் இறங்கி உள்ள பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் தனது ட்விட்டர் பக்கத்தில், கிச்சா சுதீப்பிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரதர், இந்தி தான் தேசிய மொழி எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் கிச்சா சுதீப்பை பார்த்து கேட்டிருக்கும் கேள்வி தான் பெரும் சர்சையை உருவாக்கி உள்ளது.

    இந்தியில் டப்பிங் ஏன்

    இந்தியில் டப்பிங் ஏன்

    உங்களை பொறுத்தவரையில் இந்தி தேசிய மொழி இல்லை என்றால், ஏன் உங்கள் தாய் மொழி படங்களை இந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கிச்சா சுதீப்பை டேக் செய்து கேட்டுள்ளார் நடிகர் அஜய் தேவ்கன் மேலும், எப்போதும் இந்தி தான் நம் அனைவரின் தாய் மொழி என்றும் அது தான் தேசிய மொழி என்றும் ட்வீட் செய்துள்ளார்.

    திட்டும் ரசிகர்கள்

    திட்டும் ரசிகர்கள்

    கிச்சா சுதீப் சொன்னதில் எந்தவொரு தவறும் இல்லை. இந்தி தேசிய மொழி கிடையாது. மேலும், எந்த மாநில மொழியிலும் டப் செய்து படங்களை வெளியிட அவருக்கு உரிமை உள்ளது. பான் மசாலா விளம்பரத்தில் நடிக்கும் நீங்கள் இப்படி பேசக் கூடாது என நடிகர் அஜய் தேவ்கனை கன்னட ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

    தெலுங்கு இயக்குநர் படத்தில்

    தெலுங்கு இயக்குநர் படத்தில்

    தெலுங்கு இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் நீங்கள் ஏன் நடித்தீர்கள்? என்றும் கன்னட ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மலையாள படமான த்ரிஷ்யம் படத்தை ரீமேக் செய்து விட்டு கன்னட படத்தை இந்தியில் டப் செய்யக் கூடாது என சொல்கிறீர்களே கேஜிஎஃப் 2 படத்தின் வெற்றியை தாங்க முடியவில்லையா எனவும் கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

    English summary
    Akshay Kumar tweeted, “Kiccha Sudeep brother, According to you if Hindi is not our national language then why do you release your mother tongue movies by dubbing them in Hindi? Hindi was, is and always will be our mother tongue and national language. Jan Gan Man” stirs big issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X