Don't Miss!
- News
மதநிந்தனை.. சொல்லசொல்ல கேட்காத ‛விக்கிப்பீடியா’ முடக்கம்.. பாகிஸ்தான் போட்ட உத்தரவு.. என்னாச்சு?
- Sports
களத்தில் இறங்கிய கிங் கோலி.. பயிற்சி முகாமில் நடந்த சுவாரஸ்யம்.. கச்சேரி இம்முறை இருக்கு
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Automobiles
மாருதி ஷோரூம்ல கூட்டம் குவியுது... எல்லாம் இந்த காரை பாக்கதான்... விற்பனையகங்களுக்கு வர தொடங்கிய ஃப்ரான்க்ஸ்!
- Lifestyle
புதன் பெயர்ச்சியால் பிப்ரவரி 07 முதல் அடுத்த 20 நாட்கள் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்..
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது...கைதி இந்தி ரீமேக் டைரக்டர் இவரா...வேற லெவல் ஹிட்டுக்கு பிளான் பண்ணுறாங்கேளா?
சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்து 2019 ம் ஆண்டு ரிலீசான படம் கைதி. இது மிகப் பெரிய பிளாக்பஸ்டர்க படமாக அமைந்தது.
ஹீரோயின், பாடல்கள், ஹீரோவின் மாஸ் லுக் இப்படி எதுவும் இல்லாமலும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க முடியும் என்பதை லோகேஷ் நிருபித்த படம். சிறையில் இருந்து ரிலீசாகி 10 வருடங்களாக பிரிந்திருந்திருக்கும் குழந்தையை பார்க்க செல்லும் கைதியின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்ச்சிகள் தான் படத்தின் கதை.
சிம்பிளான கதையை ஆக்ஷன் த்ரில்லிங்குடன் சொல்லி, ரசிகர்களை கவர்ந்த படம். இதன் இரண்டாம் பாகத்தை வேறு லோகேஷ் கனகராஜ் விரைவில் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கைதியின் வாழ்க்கை, போலீசுக்கு எதிராக நடக்கும் சதி, போதை கும்பல் இவை அனைத்தையும் கலந்து சொல்லி இருப்பார்கள்.
கோலிவுட்
முன்னணி
நடிகையோட
பேவரிட்
ஹீரோவும்
விஜய்தானாம்..
யார்
அந்த
நடிகைன்னு
பார்க்கலாமா!

4வது முறையாக டைரக்டராகும் அஜய்
இந்நிலையில் கைதி படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்த படத்தை இயக்குவது வேறு யாருமில்லை, நடிகர் அஜய் தேவ்கன் தான். U, Me Aur Hum, Shivaay, Runway 34 ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் இயக்கும் நான்காவது படம் இதுவாகும். உச்சகட்ட ஆக்ஷன், எமோஷனல் படமாக தயாராகி வரும் இந்த படத்திற்கு Bholaa என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

கைதி ரீமேக் எப்போ ரிலீஸ்
ஆகஸ்ட் 30 ம் தேதிக்குள் படத்தின் ஷுட்டிங்கை நடத்தி முடிக்க அஜய் தேவ்கன் முடிவு செய்திருக்கிறாராம். 2023 ம் ஆண்டு மார்ச் 30 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக குறப்படுகிறது. அஜய் தேவ்கனின் Runway 34 இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை முடித்த கையோடு, போலா படத்தின் வேலைகளை அஜய் தேவகன் துவங்கி விட்டதாக குறப்பட்டுகிறது.

நரேன் ரோலில் இவர் நடிக்கிறாரா
ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் போலா படத்தை தயாரித்து வருகின்றனர். கார்த்தி நடித்த டில்லி ரோலில் அஜய் தேவ்கனே நடிக்க உள்ளதாக குறப்படுகிறது. நரேன் நடித்த போலீஸ் ரோலில் எந்த பெரிய நடிகர் நடிக்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், நடிகை தபு தான் போலீசாக நடிக்கிறாராம்.
Recommended Video

ஹீரோ யாருன்னு சொல்லவே இல்ல
தமிழில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்படும் அதிகமான படங்களில் அக்ஷய் குமாருக்கு பதில், அஜய் தேவ்கன் தான் நடித்துள்ளார். இந்த படத்தில் இந்திக்கு ஏற்ற மாதிரி கதையில் சிறிய மாற்றங்கள் செய்ய உள்ளதாக குறப்படுகிறது. அஜய் தேவ்கன் இந்த படத்தை எவ்வாறு எடுக்க போகிறார் என்பதை பார்க்க இந்தி ரசிகர்கள் மட்டுமல்ல தமிழ் ரசிகர்களும் அதிக ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.