அஜய் தேவ்கனை வைத்து ஆக்சன் ஜாக்சன் இயக்கும் பிரபுதேவா!
பிரபுதேவா இயக்க அஜய் தேவ்கன் நடிக்கும் புதிய படத்திற்கு ஆக்சன் ஜாக்சன் என்று பெயரிட்டுள்ளனராம்.
இந்தப் படம் அதிரடி காட்சிகளுடன் கூடிய காமெடிப் படம் என்று சொல்கிறார்கள்.
இதை முறைப்படி அறிவிக்கவும் செய்துள்ளது படத் தயாரிப்புக் குழு.

ஒரிஜினல் ஹிந்தி
வாண்டட், ரவுடி ரத்தோர் ஆகிய ரீ-மேக் படங்களுக்கு பின், முதல் முறையாக, ஒரிஜினலாக, இந்தியில், ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார், பிரபு தேவா

3 ஹீரோயின்கள்
பிரபுதேவாவும், அஜய் தேவ்கனும் இணைந்து பணியாற்றப் போவது இதுவே முதல் முறை என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளதாம். இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்கப் போகிறார்களாம். சோனாக்ஷி சின்ஹா, யாமி கெளதம் ஆகியோரது பெயர்கள் இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனம் கவர்ந்த நாயகி
பிரபுதேவாவின் மனம் கவர்ந்தவர் சோனாக்ஷி என்பது பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் மீண்டும் அவர் பிரபுதேவா படத்தில் இணைகிறார். 3வது நாயகி யார் என்பதை ரகசியமாக வைத்துள்ளனர். அவர் யார் என்பது பின்னர் தெரிவிக்கப்படுமாம்.

அஜய் தேவ்கானின்
ஆக்சன் ஜாக்சன் என்பதற்கு ஒரு மறைமுக காரணமும் உள்ளதாம். அதாவது அஜய் என்ற பெயரில் வரும் முதல் இரண்டு எழுத்தும் டைட்டிலில் வருமாறு கேட்டுக் கொண்டாராம் அஜய் தேவ்கன். இதையடுத்தே ஆக்சன் ஜாக்சன் என்று பெயரிட்டுள்ளனராம்.


Click it and Unblock the Notifications











