twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமர்சியல் சினிமாவின் கலை அறிந்தவர்.. ராஜமவுலிக்கு பர்த் டே.. வாழ்த்துகளால் வழியும் ட்விட்டர்!

    By
    |

    சென்னை: பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிறந்த நாளை அடுத்து வாழ்த்துகளால் நிரம்புகிறது ட்விட்டர்.

    ஜூனியர் என்.டி.ஆர் நடித்த ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவுக்குள் என்ட்ரியானவர் இயக்குனர் ராஜமவுலி.

    அதற்கு பிறகு அவர் இயக்கிய அனைத்து படமும் சூப்பர் ஹிட்டுதான்.

    4 மொழிகளில் ரிலீசாகும் க/பெ ரணசிங்கம்.. மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு இயக்குனர் நன்றி !4 மொழிகளில் ரிலீசாகும் க/பெ ரணசிங்கம்.. மாபெரும் வெற்றியை தந்த ரசிகர்களுக்கு இயக்குனர் நன்றி !

    புது மாதிரியாக

    புது மாதிரியாக

    தான் இயக்கிய அனைத்து படத்தையும் ஹிட்டாக்கிய இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி என்கிறார்கள். பாகுபலி என்கிற வரலாற்று படத்தின் மூலமாக, மொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அவர். அதுவரை தென்னிந்திய சினிமாவை ஒரு மாதிரியாகவே பார்த்தவர்கள், புது மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள்.

    ஃபேன்டஸி படம்

    ஃபேன்டஸி படம்

    அதற்கு காரணம் ராஜமவுலிதான். அடுத்து வந்த பாகுபலி 2 உலகம் முழுவதும் இந்தியா சினிமாவுக்கான பிசினஸை வேறு தளத்துக்கு கொண்டு சென்றது. அவர் இயக்கிய பேன்டஸி படமான, மகதீரா, அந்த வகை படங்களில் வேறு எல்லையை தொட்டது. ராம்சரண் தேஜாவுக்கு இந்தப் படம் மெகா ஹிட்டாக அமைந்தது.

    சிறந்த கலைஞன்

    சிறந்த கலைஞன்

    கமர்சியல் படங்களில், ரசிகர்களின் நாடித் துடிப்பை கச்சிதமாகப் பிடித்து வைத்திருக்கும் சிறந்த கலைஞன் அவர் என்று புகழ்கிறார்கள், இயக்குனர் ராஜமவுலியை. தெலுங்கு காமெடி நடிகரான சுனிலை ஹீரோவாக்கி, (மரியாத ராமணா) எடுத்த படத்தையும் ஹிட்டாக மாற்றியவர்.

    காத்திருக்கிறது ஆர்ஆர்ஆர்

    காத்திருக்கிறது ஆர்ஆர்ஆர்

    இந்தப் படம் தமிழில், சந்தானம் நடிப்பில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. சாதாரண ஈயை வைத்தும் (நான் ஈ) மிரட்டல் படம் கொடுத்த ராஜமவுலியை எப்படியும் பாராட்டலாம். அடுத்து காத்திருக்கிறது ஆர்ஆர்ஆர். படத்தின் செட்களும் அவர்கள் வெளியிடும் சின்ன சின்ன கிளிப்களும் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.

    கமர்சியல் சினிமா

    கமர்சியல் சினிமா

    இதுவும் பீரியட் படம்தான். ஜூனியர் என்.டி.ஆரும், ராம் சரண் தேஜாவும் இந்தப்படத்துக்குப் பிறகு இந்திய ஹீரோக்களாக அறியப்பட இருக்கிறார்கள், பிரபாஸ், ராணா போல. இப்படி கமர்சியல் சினிமாவின் கலக்கல் இயக்குனர் ராஜமவுலிக்கு இன்று பர்த்டே. ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துகளால் நிரம்பி வழிகிறது ட்விட்டர்.

    அஜய் தேவ்கன்

    அஜய் தேவ்கன்

    #HBDSSRajamouli என்ற ஹேஷ்டேக்கில் அவர் பிறந்த தினத்தை டிரெண்டாக்கி வருகிறார்கள். இந்தி நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், 'இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜமவுலி. உங்களை அறிந்ததும் உங்களின் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிப்பதும் எனக்கு பெருமை என்று கூறியுள்ளார்.

    English summary
    Director SS Rajamouli celebrates his 47th birthday
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X