Demonte Colony 2 Blue Sattai Review: டிமான்ட்டி காலனி 2! அரண்மனை 4 கொடுத்த தைரியமா? ப்ளூ சட்டை பளார்
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி சினிமா பாணியை உருவாக்கிக் கொண்டவர்களில் இவரும் ஒருவர். நேற்று அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆன படங்களில், தங்கலான் படத்திற்குப் பின்னர் அதிக எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம் என்றால் அது அருள்நிதி நடிப்பில் உருவான டிமான்டி காலனி 2. இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ளூ சட்டை மாறன், டிமான்ட்டி காலனி 2 படம் குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் இல்லாமல், படத்தில் சாம்.சி எஸ்-இன் இசை பலராலும் பாராட்டைப் பெற்று வருகின்றது. படம் முதல் நாளில் ரூபாய் 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. வார இறுதி நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்பி வருகின்றது.

தமிழ் சினிமாவில் ஒரு படம் ரிலீஸ் ஆகின்றது என்றால் அதனை ரசிகர்கள் பார்க்க வருவதற்கு முன்னர், திரைப்பட விமர்சகர்களின் அபிப்ராயத்தை தெரிந்து கொண்டு வருகின்றனர். இதில் மிகவும் அதிகப்படியான ரசிகர்களால் பின் தொடரப்படுபவர்களில் ஒருவர் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இந்நிலையில் டிமான்ட்டி காலனி படம் குறித்து அவர் என்ன சொல்லியுள்ளார் என்பது குறித்து காணலாம்.
படத்தின் தொடக்கத்தில் மனைவி தனது கணவர் இறந்ததை நினைத்து வருத்ததில் இருக்கின்றார். இறந்த கணவர் தனது மனைவியிடம் ஆவியாக வந்து எதோ சொல்ல முயற்சிக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்ட மனைவி ஒரு புத்த பிக்குவை அணுகுகின்றார். அப்போதுதான் தெரிகின்றது முதல் பாகத்தில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரமுடியும் என்பது. அதன் பின்னர் படம் எந்த அளவிற்கு அமானுஷ்யங்களும் த்ரில்லருடன் செல்கின்றது என்பது மீதி கதையாக உள்ளது.

இசை: பேய் படம் என்றால் பயம் ஏற்படவேண்டும் அல்லது அடுத்து என்ன என்ற உணர்வாவது ஏற்படவேண்டும். ஆனால் இந்தப் படத்தில் அப்படி எதுவும் இல்லாமல் ஃபிளாட்டாக ஓடிக்கொண்டு உள்ளது. இதுமட்டும் இல்லாமல், படத்தின் தேவை இருக்கின்றதோ இல்லையோ அனைத்து இடங்களிலும் பின்னணி இசை கோர்க்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு தொந்தரவாக இருந்தாலும் கதை திரைக்கதையில் எதுவுமே இல்லாதபோது இசையை வைத்துதான் படத்தை நிரப்ப முடியும் என்பதால் இசை நன்றாக உள்ளது.
எதுவும் இல்லை: வழக்கமாக இதுபோன்ற பேய் படங்களை ஒரு காட்டு பங்களாவில் வைத்து படத்தை முடித்து விடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் அதுபோல இல்லாமல் செட் அமைத்ததற்கும், வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு நன்றாகவே செலவு செய்துள்ளார்கள். ஆனாலும் வி.எஃப்.எக்ஸ் போதவில்லை. மற்றபடி இந்தப் படத்தைப் பற்றி பேச எதுவுமே இல்லை.

காட்டு மொக்கைப் படம் : பேய் படம் எடுப்பவர்களுக்கு என்ன நம்பிக்கை என்றால், பேய் படங்களைப் பார்க்க தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அவர்கள் மட்டும் வந்து படத்தினைப் பார்த்தால் போதும் என்பதுதான் இவர்களின் கணக்கு. சமீபத்தில் வெளியான அரண்மனை 4 என்ற காட்டு மொக்கைப் படம் வசூலை அள்ளியது. அதேபோல் இந்த படமும் வசூல் செய்யாமலா இருந்துவிடப்போகின்றது. ஆனால் இந்த ஜென்ரல் ஆடியன்ஸை நினைத்தால் தான் கவலையாக உள்ளது" என கூறியுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











