மிகப் பிரம்மாண்டமாக உருவாகும் விக்ரம் 58.. பர்ஸ்ட் லுக்கே பயங்கர மிரட்டலா இருக்கே!
விக்ரமின் அடுத்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார்.
சென்னை: இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் நடிகர் விக்ரம்.
சாமி 2 படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம். கமல் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் கமலின் மகள் அக்ஷரா ஹாசனும் நடித்து இருக்கிறார்.
இப்படம் மட்டுமின்றி, கெளதம் மேனன் இயக்கத்தில் துருவநட்சத்திரம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களின் ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

விக்ரமின் 58வது படம்:
இந்நிலையில், அவரது 58வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிமான்ட்டி காலனி', `இமைக்கா நொடிகள்' படத்தை எடுத்த அஜய் ஞானமுத்து தான் விக்ரமின் 58-வது படத்தை இயக்குகிறார். 7ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித்குமாரும், வயாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்கிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்:
இப்படத்தில் பாலிவுட் நடிகர் வில்லனாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட்டில் படப்பிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரே மிகவும் மிரட்டலாக இருக்கிறது.

ஹீரோயின்:
இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக யார் நடிக்கிறார்கள், வேறு எந்தெந்த நடிகர், நடிகைகள் நடிக்க இருக்கிறார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரம்மாண்ட தயாரிப்பு:
ஆக்ஷன் த்ரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்சன் வேலைகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் படம் தயாராக இருப்பதால் இந்திய சினிமாவில் இது மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











