டிமான்டி காலனி 2 கொடுத்த தைரியம்.. விரைவில் மூன்றாம் பாகம்.. அப்டேட் கொடுத்த இயக்குனர்!
சென்னை: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, அருண் பாண்டியன், நடிகைகள் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி 'டிமான்டி காலனி' இரண்டாம் பாகம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது. இப்படம் மகத்தான வசூலை அள்ளியதைத் தொடர்ந்து இப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான வேலையை இயக்குநர் தொடங்கி உள்ளார்.
2015ம் ஆண்டு வெளியானது 'டிமான்ட்டி காலனி’ படத்தை மு.க.தமிழரசு தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இதில் ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர். ஒரு இரவில், ஒரு வீட்டிற்குள் நடக்கும் பேயின் அட்டகாசம் ரசிகர்களை திகிலூட்டியது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 7 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.

டிமான்டி காலனி 2: முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்துவேல் டிமான்டி காலனி 2 படத்தை இயக்கினார். இதில் அருள்நிதி, அருண் பாண்டியன், பிரியா பவானி சங்கர், அர்ச்சனா ரவி சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர். ஆகஸ்ட் 15ந் தேதி படம் வெளியான இப்படத்தை பார்த்த ரசிகர்கள் வழக்கமான பேய் படங்களை போல் அல்லாமல் புதுவித அனுபவத்தை கொடுத்தாக கூறி இருந்தனர். படம் வெளியான முதல் நாளே படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனம் வந்ததால் படம் நல்ல வசூலை அள்ளியது. முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்திய டிமான்டி காலனி 2 படம் மொத்தமாக ரூ. 26 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது
மூன்றாம் பாகம்: இரண்டாம் பாகத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியைத் தொடர்ந்து மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முன் தயாரிப்பு பணிகளை இயக்குனர் அஜய் ஞானமுத்து தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் படப்பிடிப்பை நடத்தப்போவதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு பாகமும் சென்னையை சுற்றி நடந்த நிலையில்,இந்த கதையின் முக்கியமான கரு வெளிநாட்டில் இருந்து தான் தொடங்கும் என்பதால், அங்கிருந்தே படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்டு மைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கவுள்ளார்களாம்.


Click it and Unblock the Notifications