ஓவினாம் தற்காப்பு கலையைச் சொல்லும் கலைவேந்தன்

By Mayura Akilan

ஓவினாம் தற்காப்புக்கலையைப் பிரபலப்படுத்தும் வகையில் புதிய தமிழ் சினிமா ஒன்று தயாராகிவருகிறது.

எஸ்.கே.பிலிம்ஸ் இன்டர்நேசனல் என்ற பட நிறுவனம் சார்பாக எஸ்.கமலகண்ணன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு 'கலைவேந்தன்' என்று பெயர் வைத்துள்ளனர்.

கலைவேந்தன் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ஆர்.கே.பரசுராம். இவர் திரைப்பட கல்லூரியில் பயிற்சி பெற்றதுடன் கனடாவிலும் இயக்குனர் பயிற்சிப்பெற்றிருக்கிறார்.

அஜய் – சனம் ஷெட்டி

அஜய் – சனம் ஷெட்டி

இந்தப் படத்தில் நாயகனாக அஜய் நடிக்கிறார். இவர் 'அக்கு' என்ற படத்தில் நாயகனாக நடித்தவர். அந்த படம் பரபரப்பான படமாக பேசப்பட்டு பெரிய வெற்றியும் பெற்றது. கதாநாயகியாக சனம் ஷெட்டி நடிக்கிறார். இவர் அம்புலி 3 D படத்தில் நடித்தவர்.

ஓவினாம் தற்காப்பு கலை

ஓவினாம் தற்காப்பு கலை

ஓவினாம் தற்காப்பு கலை என்பது ஜூடோ, குங் பூ, கராத்தே இந்த மூன்றின் கலவைக்கு பெயர்தான் ஓவினாம். இந்த கலையை பயன்படுத்தி வரும் முதல் திரைப்படம் " கலை வேந்தன் " தான்.

நூறு கலைஞர்கள்

நூறு கலைஞர்கள்

இந்த ஓவினாம் பயிற்சி பெற்ற நூறு கலைஞர்கள் இந்த படத்தில் நடிக்கிறார்கள். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது கலை வேந்தன் என்கிறார் இயக்குனர் ஆர்.கே.பரசுராம்.

மாஸ்டர் நாயகன்

மாஸ்டர் நாயகன்

ஓவினாம் என்ற தற்காப்பு கலையின் மாஸ்டராக பணிபுரியும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலும், பிரச்சினையும்தான் கதை என்கிறார் இயக்குநர் பரசுராம். காதல் விவகாரம் கதாநாயகியின் பெற்றோருக்கு தெரியவர பிரச்சனை பெரிதாகிறது. இதற்கு இடையில் காதலர்களுக்கு நடுவில் வில்லனால் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது.

கதாநாயகி கொலை

கதாநாயகி கொலை

இடையில் கதாநாயகி கொல்லப்படுகிறார்.கொலை செய்தது யார் ? என்ற வினாவுக்கு விடை பரபரப்பான திரைக்கதையின் மூலம் வெள்ளித்திரையில் வெளிச்சமாகும் என்கிறார் இயக்குநர்.

கலாபவன் மணி

கலாபவன் மணி

முக்கிய வேடத்தில் கலாபவன் மணியுடன் மனோபாலா, டி.பி.கஜேந்திரன், அனுமோகன், காதல் சுகுமார், ஆர்த்தி, சம்பத், நளினி, தலைவாசல் விஜய், நெல்லை சிவா, ராமச்சந்திரன் ஆதேஷ், சங்கர், யுவராணி, சாதனா, அர்ச்சனா, எஸ்.கமலகண்ணன், விஜய் ஆனந்த் ஜே.முரளிகுமார், மனோகரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளி சிறுவன்

மாற்றுத்திறனாளி சிறுவன்

இந்த படத்தில் இரண்டு கால்களுமே இல்லாத ஒரு பத்து வயது சிறுவன் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்ததுடன், ஒரு சண்டை காட்சியிலும் நடித்திருக்கிறான்.

இசை – ஸ்ரீகாந்த் தேவா

இசை – ஸ்ரீகாந்த் தேவா

ஒளிப்பதிவு - எஸ்.கார்த்திக், பாடல்கள் -சினேகன், இசை - ஸ்ரீகாந்த் தேவா, எடிட்டிங் -ஜி.சசிகுமார், ஸ்டன்ட் -சையத், நாக்கவுட் நந்தா, நடனம்- சாந்திகுமார், தயாரிப்பு நிர்வாகம்-இளையராஜா, மாரியப்பன் செல்வம், தயாரிப்பு எஸ்.கமலகண்ணன்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X