கஜோல் செல் நம்பரை பகிரங்கமாக டிவிட்டரில் வெளியிட்ட அஜய்.. ஒய் திஸ் கொலைவெறி?

கஜோலின் செல்போன் நம்பரை வெளியிட்டது தொடர்பாக அஜய் தேவ்கன் விளக்கமளித்துள்ளார்.

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை கஜோலின் செல்போன் நம்பரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவரது கணவரும், நடிகருமான அஜய் தேவ்கன்.

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர ஜோடி அஜய் தேவ்கன் - கஜோல். முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்த கஜோல், கடந்த 1999ம் ஆண்டு அஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

[ பிக் பாஸ் தலையில் இடியை இறக்கி கதறவிட்ட ஐஸ்வர்யா ]

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டார் கஜோல்.

ஷாக் தந்த அஜய்:

ஷாக் தந்த அஜய்:

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அஜய் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கஜோலின் செல்போன் நம்பரை பகிர்ந்திருந்தார். அஜய் தனது டிவிட்டில், ‘என் மனைவி கஜோல் தற்போது வெளியூர் சென்றிருக்கிறார். அவரை தொடர்புகொள்ள இந்த செல்போன் நம்பரை பிரயோகிக்கலாம்' எனக் கூறியிருந்தார்.

ரகசியம்:

ரகசியம்:

ரசிகர்களின் அன்புத் தொல்லையைத் தவிர்ப்பதற்காக பொதுவாக பிரபலங்களின் செல்போன் நம்பர்கள் எப்போதும் ரகசியமாகவே வைக்கப்படும். மிகவும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அவர்களது பெர்சனல் நம்பர்கள் தரப்படும். ஆனால், இதில் இருந்து விதிவிலக்காக அஜய், கஜோலின் செல்போன் நம்பரை அறிவித்தது பலரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

அஜய்க்கு அறிவுரை:

அஜய்க்கு அறிவுரை:

அந்த எண் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவியது. இந்த நம்பரை சேமித்து வைத்துக் கொண்ட பலரும். அதற்கு மெசேஜ் அனுப்பத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த கஜோலின் நலம் விரும்பிகள் அஜய்க்கு அறிவுரை வழங்கினர். ஆனால் சம்பந்தப்பட்ட கஜோலோ இது தொடர்பாக எதுவும் கூறாமல் தொடர்ந்து மவுனம் காத்து வந்தார். இது பலரையும் குழப்பமடையச் செய்தது.

விளையாட்டு:

விளையாட்டு:

இந்நிலையில், தனது மனைவி நம்பரை எதற்காக பகிர்ந்தேன் என்று டிவிட்டர் வாயிலாகவே அஜய் விளக்கமளித்துள்ளார். அதில், "நான் இந்த நம்பரை உங்களை கேலி செய்யவே பகிர்ந்தேன். ஒரு திரைப்படத்திற்காக நிகழ்த்தப்பட்ட விளையாட்டு இது" என அவர் பதிவிட்டுள்ளார்.

ஆபத்து:

ஆபத்து:

இந்த பார்த்த பலரும், ‘என்ன விளையாட்டு இது அஜய்' என்றும், மற்றும் சிலர் ‘சூப்பர் பிராங்க்' என்றும் கூறி வருகின்றனர். விளையாட்டாக இருப்பினும், இது போன்ற நம்பர்களை இணையதளத்தில் வெளியிடுவது பெரும் ஆபத்து என்பதை அஜய் ஏன் உணரவில்லை எனத் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X