twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனர் விஜய் மீதான துரோகப் புகார்... 'தலைவி' தயாரிப்பாளர் வருத்தம்.. பதிவை நீக்கினார் அஜயன்பாலா

    By
    |

    சென்னை: 'தலைவி' பட இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டதாகக் கூறியிருந்த, எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன்பாலா, அந்த பேஸ்புக் பதிவை திடீரென நீக்கியுள்ளார்.

    Recommended Video

    Thalaivi Second Look | Jayalalitha 73rd Birthday | A.L.Vijay | Aravind Swami

    உதயநிதி, ஹன்சிகா நடித்த மனிதன், சேரன் நடித்த சென்னையில் ஒருநாள், பிரபுதேவா நடித்த லட்சுமி உட்பட பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதியிருப்பவர் அஜயன் பாலா.

    தற்போது அமீரின் நாற்காலி, கிரிமினல் உட்பட சில படங்களுக்கு எழுதி வருகிறார். விஜய் இயக்கிய, மதராசபட்டினம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

    ஃபைனலி.. தாலிக்கட்டும் வீடியோவை வெளியிட்ட பிரேம்ஜி.. முடிஞ்சுடுச்சா? பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!ஃபைனலி.. தாலிக்கட்டும் வீடியோவை வெளியிட்ட பிரேம்ஜி.. முடிஞ்சுடுச்சா? பங்கம் செய்யும் நெட்டிசன்ஸ்!

    கங்கனா ரனவத்

    கங்கனா ரனவத்

    இவர், நடிக நிலம் என்ற நடிப்பு பயிற்சிப் பள்ளியை சென்னையில் நடத்தி வருகிறார். இவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையிலேயே, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை விஜய் இயக்குகிறார். 'தலைவி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் கங்கனா ரனவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கிறார்.

    அவமானத்தை

    அவமானத்தை

    இந்த படத்தின் போஸ்டரில் தனது பெயர் இல்லை என்பதால், இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டார் என்று எழுத்தாளர் அஜயன்பாலா பரபரப்பு புகார் கூறி இருந்தார். இது தொடர்பாக பேஸ்புக்கில் அவர், சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும் தலைவி படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

    துரோகங்களை

    துரோகங்களை

    நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து, கோர்ட் வழக்குகளில் ஆதராமாகப் பயன்படுத்தி வழக்கில் வெற்றிபெற்ற பின் என் பெயரை சுத்தமாக படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை' என்று கூறியிருந்தார்.

    ஆதரவும் வருத்தமும்

    ஆதரவும் வருத்தமும்

    இந்நிலையில், தனது பதிவை திடீரென்று நீக்கியுள்ளார். ஏன் என்பது பற்றியும் பேஸ்புக்கில் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில், 'இன்று காலை தலைவி பட பிரச்னை தொடர்பாக முகநூலில் இட்ட பதிவுக்கு பலரும் ஆதரவும் வருத்தமும் தெரிவித்தனர். தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்து, நாளை நேரில் பேசித் தீர்க்க சென்னை வருவதாக உறுதி கூறியதால் பதிவை நீக்கியுள்ளேன். நாளை, சந்திப்புக்குபின் தொடர்புகொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

    English summary
    Writer Ajayan bala has removed his facebook post against A.L.Vijay
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X