போச்சு.. ஆஜித் குடும்பம் என்ன பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாங்க.. எகிறும் ஆரியின் கிரேஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக ஃபிரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி இன்று வெளியான முதல் புரமோவில் கேபியின் அம்மா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார். இதற்கு முன்பு வந்த போட்டியாளர்களின் குடும்பத்தினரை போல் அவரும் ஆரியை புகழ்ந்தார்.

கண்டியணைத்து கண்ணீர்

கண்டியணைத்து கண்ணீர்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ஆஜித்தின் குடும்பத்தினர் வந்துள்ளனர். தனது குடும்பத்தினரை பார்த்த ஆஜித் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் விடுகிறார்.

வருத்தப்பட்ட அம்மா

வருத்தப்பட்ட அம்மா

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டின் பெட்ரூமில் அமர்ந்தப்படி அனைத்து ஹவுஸ்மேட்ஸுடனும் அவர்கள் பேசுகின்றனர். அப்போது தனது மகனின் தலையை கோதியப்படி, வந்து இத்தனை நாட்கள் ஆச்சு பேசவே மாட்டேங்கிறான் என்று வருத்தப்படுகிறார் ஆஜித்தின் அம்மா.

உடம்பு சரியில்லையா?

உடம்பு சரியில்லையா?

அப்போது ஆஜித்தின் உறவினர் பாலாவை பார்த்து, நல்லா பேசுவீங்களே உடம்பு சரியில்லையா என்று கேட்கிறார்.
அதற்கு நான் கொயட் என்று பதில் சொல்கிறார் பாலாஜி. அதனைக்கேட்ட ஆஜித்தின் உறவினர் ஓ.. நீங்களா என்று கேலியாக பதில் கேள்வி கேட்கிறார்.

ஏன் யாருமே சொல்லல?

ஏன் யாருமே சொல்லல?

தொடர்ந்து பேசும் அவர், ஆஜித் ரொம்ப சின்ன பையன், ஒவ்வொரு முறையும் நாமினேட் ஆகும் போது ஒரு க்ளீயர் பிக்சர அவனுக்கு யாருமே சொல்லலையோ என்று ஹவுஸ்மேட்ஸ்களை கேட்கிறார்.

என் வாயை அடைச்சிட்டாங்க

என் வாயை அடைச்சிட்டாங்க

அதற்கு பதில் சொல்லும் ஆரி, என் வாயைதான் அடைச்சிட்டாங்களே. டிப் கொடுத்ததற்குதான், ஆரி அட்வைஸ் செய்கிறார் என்று என் வாயை அடைத்துவிட்டார்களே என்றார். மேலும் முதல் வாரமே அவன் வாய்ஸ் வெளியே வரணும்னு சொன்னேன் என்றும் கூறினார் ஆரி.

கடைசி வரை புரிஞ்சுக்கல

கடைசி வரை புரிஞ்சுக்கல

அதனைக் கேட்ட ஆஜித்தின் உறவினர், அது கரெக்ட்டுதான். கடைசி வரைக்கும் ஆஜித்துக்கு அது புரியவே இல்லை என்று கூறினார். ஆஜித்தின் குடும்பத்தினரும் ஆரிக்கே ஆதரவாய் பேசுகின்றனர். இதனைக் கேட்டு ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் ஈயாடவில்லை. ரியோவும் சோமும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

பாலாஜிக்கு தான் அடி

பாலாஜிக்கு தான் அடி

பிக்பாஸ் வீட்டிற்குள் இதுவரை வந்த ஹவுஸ்மேட்ஸ் குடும்பத்தினர் அனைவருமே ஆரியின் புகழைதான் பாடியுள்ளனர். ஆஜித் பாலாஜி பாலாஜி என்று அவர் பின்னாடியே சுற்றிய நிலையில் அவர் ஏதும் ஆஜித்துக்கு அட்வைஸ் கொடுக்கவில்லை என்று மறைமுகமாக கூறியுள்ளனர் அவரது குடும்பத்தினர்.

Recommended Video

சினிமாவுல LADIES க்கு CHANCE EASY இல்ல |ACTRESS GAYATRI REMA CHAT PART-02 | Filmibeat Tamil
இன்றும் புலம்புவார்

இன்றும் புலம்புவார்

ஏற்கனவே ஆரிக்கு அதிகரிக்கும் புகழால் ரியோ, பாலாஜி, ரம்யா ஆகியோர் செம காண்டில் உள்ளனர். ரியோ கிடைத்த இடத்தில் எல்லாம் அர்ச்சனா சொன்னதை போல், ஆரிக்கு ஃபேவராக எடிட்டிங் செய்வதாக கூறி வருகிறார். இந்நிலையில் இந்த புராமோவை பார்த்த ரசிகர்கள் என்றும் ரியோ புலம்புவார் என இப்போதே கிண்டலடிக்க தொடங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X