இந்த வாரம் போயிடுவேன்.. என்னன்னு பார்த்துடுறேன்.. நாமினேட்டான கடுப்பில் கையை உடைத்துக்கொண்ட ஆஜீத்!

சென்னை: ஹவுஸ்மேட்ஸ் தன்னை நாமினேட் செய்ததால் கடுப்பான ஆஜித் பாத்ரூமில் கையை உடைத்துக் கொண்டார்.

பிக்பாஸ் வீட்டில் நேற்று இரண்டாவது முறையாக ஓபன் நாமினேஷன் புராசஸ் நடைபெற்றது.

இந்த நாமினேஷனில் ஷிவானி, கேபி, ஆஜித், ரம்யா, சோம் ஆகிய 5 பேர் இடம்பிடித்தனர்.

ஆரி நாமினேட் செய்யவில்லை

ஆரி நாமினேட் செய்யவில்லை

இதுகுறித்து கார்டன் ஏரியாவில் பாலாஜியிடம் பேசிய ஆஜித், இந்த முறை என்னை ஆரி நாமினேட் செய்யவில்லை. அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்றார். அதனைக் கேட்ட பாலாஜி அவருக்கு சோம் தனது காப்பி நல்லா இல்லை என்று கூறியதுதான் பிடிக்கலையாம் என்று ஆரியை கிண்டலடித்தார்.

கடுப்பான ஆஜித்

கடுப்பான ஆஜித்

தொடர்ந்து பாலாஜியிடம் பேசிய ஆஜித், இன்வால்டு இல்லை என்று தன்னை கேபி மற்றும் நாமினேட் செய்தது மற்றும் லெஸ் காம்பிடிட்டிவ் என ரம்யா நாமினேட் செய்தது ஆகிய காரணங்களால் கடுப்பானார். எதிலும் ஒப்பினியன வைக்கவில்லை என்று கூறுகிறார்கள், எதில் ஒப்பினியன் வைக்கவில்லை.

ஒப்பினியன் சொல்ல மாட்டேன்

ஒப்பினியன் சொல்ல மாட்டேன்

கமல் சார் சொன்னார் வாய்ஸ் கேட்கலன்னு.. இப்போ நான் பேசிட்டுதானே இருக்கேன். எல்லாத்துலேயே ஒப்பினியன் சொல்ல மாட்டேன். வெளியேயும் அப்படிதான். இருக்குறதுல தான் சொல்ல முடியும். சீட் டாஸ்க்லாம் சேஃப் கேம் ஆடினாங்க அதெல்லாம் தெரியாது என்று கோப்பட்டார்.

ஓபி அடிக்குது..

ஓபி அடிக்குது..

மேலும் இந்த வாரம் போயிடுவேன், போறதுக்குள்ள என்னன்னு பார்த்துட்டு போறேன் என்று கொந்தளித்தார் ஆஜித். தொடர்ந்து பேசிய பாலாஜி, கேபி நல்லா ஓபி அடிக்குது. வேலையிலும் ஓபி அடிக்குது டாஸ்க்குலேயும் ஓபி அடிக்குது. ரெஸ்பான்ஸிபிளிட்டி கொடுத்தா ஸ்ட்ரேட்டர்ஜின்னு பேசுது.. வெரி ஸ்மார்ட் என்று விளாசினார்.

கொட்டித்தீர்த்த பாலாஜி

கொட்டித்தீர்த்த பாலாஜி

மேலும் பேசிய பாலாஜி, கேபிக்கிட்ட நான் ஒரு விஷயத்த சொல்லியிருக்கேன். அர்ச்சனாக்கா பண்ணது எனக்கு உண்மையா ஃபேக்கான்னு தெரியல டவுட்டா இருக்குன்னு. இது ரெண்டு பேருக்குள்ள நடந்த மேட்டர். நம்பி சொன்னதை அர்ச்சனா அக்காக்கிட்ட சொல்லியிருக்கு. யாரு பின்னாடி பேசினது கேபியா நானா? என்றும் கேபி மீதுள்ள கோபத்தை கொட்டித் தீர்த்தார்.

கையை உடைத்த ஆஜித்

கையை உடைத்த ஆஜித்

இதைத்தொடர்ந்து டைனிங் ஏரியாவில் உள்ள சோஃபாவில் கையில் கர்ச்சீஃப் கட்டுடன் அமர்ந்திருந்தார் ஆஜித். அப்போது என்ன என்று ரியோ கேட்க ஏதோ சமாளித்தார். ஆனால் சோம், நான் பாத்ரூமில் இருந்தபோது சத்தம் கேட்டது, நீதான என்று கேட்டு கையை பார்த்தார். பின்னர் ரியோவும் சோமும் இது தவறு என அவருக்கு அட்வைஸ் செய்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X