Just In
- 44 min ago
முதன் முறையாக.. இப்படியொரு கேரக்டரில் நடிக்கும் 'பிக் பாஸ்' டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன்!
- 50 min ago
நயன்தாராவுக்கு ரெஸ்ட் கொடுத்துடலாம் போலயே.. சம்யுக்தாவின் பர்ஃபாமன்ஸை பாராட்டும் ரசிகர்கள்!
- 59 min ago
பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வென்ற ஆரி.. சனம் ஷெட்டி என்ன சொல்லியிருக்காங்க பாருங்க!
- 1 hr ago
90 நாட்கள் போரிங்காய் இருந்தவருக்கு 16 கோடி ஓட்டுகள்.. ரம்யா பாண்டியனை மறைமுகமாக சாடும் பிரபலம்!
Don't Miss!
- Sports
33 வருஷ ஆஸ்திரேலிய சாதனை... முறியடித்த இளம் இந்திய அணி... வேற லெவல் சாதனை!
- Automobiles
2021 டொயோட்டா ஃபார்ச்சூனரை முன்பதிவு செய்தவர்களுக்கு ஓர் இன்ப செய்தி!! கார் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது
- Education
ரூ.12 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு... கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவாமே... ஆய்வு சொல்கிறது!
- Lifestyle
புற்றுநோய் நோயாளிகளின் கடவுளாக வாழ்ந்த டாக்டர் வி. சாந்தா மரணம்... அவரைப் பற்றிய உண்மைகள்...!
- Finance
இது சூப்பர் சலுகையாச்சே.. வட்டியில்லாமல் பணமா.. நல்ல வாய்ப்பு தான்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆரியோட அட்வைஸ கேட்ருக்கலாம்.. ஆஜித்துக்கு அக்கா சொன்ன அட்வைஸ்.. இனிமே என்ன பிரயோஜனம்!
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆஜித்தின் குடும்பத்தினர் ஆரி கொடுத்த அட்வஸை அவர் கேட்டிருக்கலாம் என்றனர்.
பிக்பாஸ் வீட்டில் கடந்த மூன்று நாட்களாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது.
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் இறுதி நாளான நேற்று கேபியின் அம்மாவை தொடர்ந்து ஆஜித்தின் அம்மாவும் அக்காவும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தனர்
உங்கள நெடுஞ்சாலை படத்துல பார்த்திருக்கேன்.. வந்த வேகத்தில் ஆரி பக்கம் சாய்ந்த சுனிதா.. காண்டான கேபி!

இதுக்கா சண்டை போட்டீங்க
தனது அம்மாவையும் அக்காவையும் பார்த்த ஆஜித் அவர்களை கட்டியணைத்து கண்ணீர் விட்டார். பின்னர் மாறி மாறி நலம் விசாத்தனர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை சுற்றிப் பார்த்தனர். அப்போது இந்த வீட்டை க்ளீன் பண்ணவா இவ்ளோ சண்டை போட்டுக் கொள்கிறீர்கள் என்று கேட்டு அசிங்கப்படுத்தினார் ஆஜித்தின் அக்கா.

பேசவே மாட்டேங்கிறான்
பின்னர் பெட்ரூமில் அமர்ந்தப்படி அனைத்து ஹவுஸ்மேட்ஸுடனும் அவர்கள் பேசினர். அப்போது தனது மகனின் தலையை கோதியப்படி, வந்து இத்தனை நாட்கள் ஆச்சு பேசவே மாட்டேங்கிறான் என்று வருத்தப்பட்டார் ஆஜித்தின் அம்மா.

உடம்பு சரியில்லையா?
அப்போது ஆஜித்தின் அக்கா பாலாவை பார்த்து, நல்லா பேசுவீங்களே உடம்பு சரியில்லையா என்றார். அதற்கு நான் கொயட் என்று பதில் சொன்னார் பாலாஜி. அதனைக்கேட்ட ஆஜித்தின் அக்கா ஓ.. நீங்களா என்று கேலியாக கேட்டார். மேலும் உங்களை அம்மாவுக்கு பிடிக்கும், நீங்கள் அம்மாவின் தம்பி போன்று இருக்கிறீர்கள் என்றார்.

ஏன் யாருமே சொல்லல?
தொடர்ந்து பேசிய ஆஜித்தின் அக்கா, ஆஜித் ரொம்ப சின்ன பையன், ஒவ்வொரு முறையும் நாமினேட் ஆகும் போது அவனோட ஈடுபாடு குறைவா இருக்கு என்பதை ஏன் ஒரு க்ளீயர் பிக்சரா அவனுக்கு யாருமே சொல்லலையோ என்று கேட்டார்.

வாயை அடைச்சிட்டாங்க
அதற்கு பதில் கூறிய ஆரி, என் வாயைதான் அடைச்சிட்டாங்களே. டிப் கொடுத்ததற்குதான், ஆரி அட்வைஸ் செய்கிறார் என்று என் வாயை அடைத்துவிட்டார்களே என்றார். மேலும் முதல் வாரமே அவன் வாய்ஸ் வெளியே வரணும்னு சொன்னேன் என்றும் கூறினார் ஆரி.

அட்வைஸ கேட்டுருக்கணும்
அதனைக் கேட்ட ஆஜித்தின் உறவினர், அது கரெக்ட்டுதான். கடைசி வரைக்கும் ஆஜித்துக்கு அது புரியவே இல்லை. ஆஜித் ஆரியின் அட்வைஸை கேட்டிருக்க வேண்டும். எனக்கும் அது தோனுச்சு. ஒருத்தர் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்லும் போது அதுகுறித்து அவரிடம் அமர்ந்து நீ பேசியிருக்க வேண்டும் என்றார்.

ரம்யா சொல்லியிருக்கணும்
தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அம்மா மற்றும் அக்காவுடன் அமர்ந்து பேசினார் ஆஜித். அப்போது பேசிய ஆஜித்தின் அக்கா ரம்யாலாம் உன்கூடதான் இருக்காங்க. நீ என்ன பண்றன்னு உனக்கு எடுத்து சொல்லியிருக்கணும். சிலதை எல்லாம் ரீகிரியேட் பண்ண முடியாது என்றார்.

எப்போதும் வர முடியாது
அதற்கு பதில் சொன்ன ஆஜித், அவங்களும் போட்டியாளர்கள்தான் என்றார். அதற்கு அப்புறம் என்ன அக்கா தம்பி என்று சொல்லிக்கொள்ளணும் என்றார். நாங்கள் உன்னோடு எப்போதும் வர முடியாது என்று தனது தம்பிக்கு அட்வைஸ் கூறினார்.

பாலா திமிர் பேச்சு
பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டுக்குள் சென்றனர். அப்போது ரம்யா குறித்து பேசிய ஆஜித்தின் அக்கா, ரம்யா சிரிப்பில் நக்கல் தெரியும் என்றார். பாலா குறித்து பேசிய ஆஜித்தின் அம்மா பாலாவுக்கு திமிர் பேச்சு, திமிராய் பேசிவிட்டு அப்படியே நடந்து செல்வார் என்று டேமேஜ் செய்தார்.

ஃபிரீஸ் டாஸ்க்
தொடர்ந்து அம்மாவுக்காக பாட்டுப்பாடினார் ஆஜித். பின்னர் நேரம் முடிந்து புறப்பட்ட அவர்கள், ஆரியிடம் ஆஜித்துக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று கூறினார். அவர்கள் புறப்படும் நேரத்தில் பிக்பாஸ் ஃபிரீஸ் டாஸ்க் கொடுத்தார். அப்போது ஆஜித்தும் ஃபிரீஸானார்.

நாமினேட் பண்ணக்கூடாது
ஆனால் ஹவுஸ்மேட்ஸ் போ போ என்று கூறினர். இதனைக் கேட்ட ஆஜித்தின் அக்கா, அப்புறம் லக்ஸரி பட்ஜெட் பாயிண்ட்ஸ் ஆஜித்தால போயிடுச்சுன்னு நாமினேட் பண்ணக்கூடாது என்றார். ஆஜித்தின் குடும்பத்தினரும் ஆரிக்கே ஆதரவாய் பேசினர். இதனைக் கேட்டு ஹவுஸ்மேட்ஸ் முகத்தில் ஈயாடவில்லை.