சும்மா சொல்லக்கூடாது.. செம்ம பர்ஃபாமன்ஸ்.. கன்ஃபெஷன் ரூமில் காதலியை காப்பாற்றிய ஆஜித்!
சென்னை: ஆஜித்தை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் அங்கேயும் அவருக்கு ஒரு டாஸ்க்கை கொடுத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களை கடந்துள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது வரை 10 போட்டியாளர்கள் உள்ளனர்.
இந்நிலையில் போட்டியாளர்களை ஒவ்வொருவராய் கன்ஃபென்ஷன் ரூமுக்கு அழைக்கும் பிக்பாஸ் இத்தனை நாட்களில் பிக்பாஸ் வீட்டில் உங்களுடைய பங்களிப்பு என்ன என்று கேட்டு வருகிறார்.

அழ வைக்கும் பிக்பாஸ்
இதுவரை ஷிவானி, ரியோ, அனிதா, அர்ச்சனா ஆகியோரை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்துள்ள பிக்பாஸ், அவர்களை அழ வைத்து பின்னர் செல்லமாக பேசி, சமாதானப்படுத்தியும் சந்தோஷப்படுத்தியும் வெளியே அனுப்பி வருகிறார்.

யாரை மிஸ் பண்றீங்க?
அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஆஜித்தை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்தார் பிக்பாஸ். உள்ளே சென்ற ஆஜித்திடம் வீட்டுக்குள் வந்த இத்தனை நாட்களில் யாரை ரொம்ப மிஸ் பண்றீங்க என்று கேட்டார்.

எதை நோக்கி பயணம்?
அதற்கு பதில் சொன்ன ஆஜித், அம்மாவ மிஸ் பண்றேன் என்றார. ஏதாவது ஒரு செகண்டில் அம்மாவை மிஸ் பண்ணிடுறேன் என்று கூறினார். தொடர்ந்து பேசிய பிக்பாஸ், இவ்வளவு சின்ன வயசுல நிறைய சாதிச்சுருக்கீங்க. இந்த கேம் ஷோவை தாண்டி எதை நோக்கி உங்களுடைய பயணம் என்றார்.

நடிச்சுக் காட்டுங்க
அதற்கு பதில் சொன்ன ஆஜித் பாட்டுப்பாடுறதை தாண்டி நான் நல்லா நடிக்கிறேன் என்று பலரும் என்னிடம் கூறியுள்ளார்கள். அதனால் நான் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். அதனைக் கேட்ட பிக்பாஸ், ஓகே ஒரு சீன் நடிச்சுக் காட்டுங்க என்று கூறி ஒரு சீனை கூறினார்.

அம்மா ஓகேவா கேர்ள் ஃபிரண்ட்டா?
அதாவது, படத்தின் இறுதிக்காட்சி, வில்லன்கள் உங்கள் அம்மாவை துப்பாக்கி முனையில் பிடித்து வைத்திருக்கிறாகள். இந்த இடத்தில் அம்மா ஓகேவா அல்லது கேர்ள் ஃபிரண்ட் வச்சுக்கலாமா என்று கேட்டார் பிக்பாஸ்.

சும்மா சொல்லக்கூடாது
அதற்கு இந்த இடத்துல மட்டும் கேர்ள் ஃபிரண்ட் வச்சுக்கலாம் பிக்பாஸ் என்றார். அதைக் கேட்ட பிக்பாஸ், இதைத்தான் எதிர்பார்த்தேன் ஆஜித் வச்சுக்குங்க என்று கூறினார். தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் ஆஜித். சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே நடித்தார் ஆஜித்.

நீங்க போங்க ஹீரோ
ஆஜித்தின் பர்ஃபாமன்ஸை பார்த்த பிக்பாஸ், ரொம்ப நல்லா இருந்துச்சு. நீங்க போகலாம் ஹீரோ..மக்கள் உங்கள ஒரு முழு எண்டெர்டெய்னரா பார்க்க காத்துட்டு இருக்காங்க என்று கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள், ஆஜித்துக்குள் இப்படி ஒரு திறமை இருக்கா என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











