இரிட்டேட்டாகுதா.. அனிதாவால தப்பிச்சுட்ட தம்பி.. அடுத்த வாரம் நீதான்.. ஆஜித்தால் காண்டான ரசிகர்கள்!
சென்னை: தன்னை கடைசியாக சேவ் செய்வது இரிட்டேட்டாக்குவதாக ஆஜித் கூறியதை கேட்ட ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள விஜய் டிவி புராடெக்ட்டுகளில் ஒருவர் ஆஜித்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பங்கேற்று வின்னரானார்.

மிக்சர் ஆஜித்
அதனை தொடர்ந்து விஜய் டிவியின் பாடல் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். தற்போது பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அஜித்தை ரசிகர்கள் மிக்சர் சாப்பிடும் போட்டியாளர்களில் ஒருவர் என்றே அழைத்து வருகின்றனர்.

எவிக்ஷன் ஃபிரி பாஸ்
ஆஜித் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மூன்றாவது வாரமே எவிக்ட்டானார். ஆனால் அவரிடம் இருந்த எவிக்ஷன் ஃபிரீ பாஸை வைத்து எவிக்ஷனில் இருந்து தப்பித்தார். அதன் பிறகும் வாக்கு எண்ணிக்கையில் கடைசி இடத்தில் டேஞ்சர் ஸோனில் இருந்து வருகிறார்.

காப்பாற்றும் விஜய் டிவி
ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு போட்டியாளர் எதையாவது பேசி மக்களின் கோபத்திற்கு ஆளாகி வெளியேறி வருகின்றனர். சில சமயம் விஜய் டிவியே தன்னுடைய புராடெக்ட்டுகளை காப்பாற்றுவதற்காக நல்ல போட்டியாளர்களை வெளியேற்றியிருக்கிறார்.

ஆரி சேவ்டு
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நாமினேஷனில் ஆரி, அனிதா, ஷிவானி, ஆஜித், கேபி ஆகியோர் இடம் பிடித்தனர். அவர்களில் ஆரி சனிக்கிழமையே சேவ் செய்யப்பட்ட நிலையில், அனிதா, ஆஜித், ஷிவானி, கேபி ஆகிய 4 பேர் எவிக்ஷன் லிஸ்ட்டில் இருந்தனர்.

அலுத்துக்கொண்ட ஆஜித்
நேற்றைய எபிசோடில் சிறப்பு விருந்தினராக வந்த ஜெயம் ரவி கேபி மற்றும் ஷிவானி ஆகிய இருவரை காப்பாற்றினார். இதனால் எவிக்ஷன் லிஸ்ட்டில் ஆஜித்தும் அனிதாவும் இடம் பிடித்திருந்தனர். அந்த நேரத்தில் கமல் பிரேக் விட, கடைசியில் சேவ் ஆவது இரிட்டேட் ஆகிறது என்று அலுத்துக்கொண்டார் ஆஜித்.

மோட்டிவேட் செய்தார்
அவரை சமாதானப்டுத்தினார் பாலாஜி. மூன்றாவது வாரத்திலேயே எவிக்ட்டான உன்னை இதுவரை கொண்டு வந்துள்ளார்கள். நீ வாரா வாரம் வளர்ந்து கொண்டிருக்கிறாய் உனக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்று கூறி மோட்டிவேட் செய்தார். ஆஜித் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசியுள்ளனர்.
குழந்தை ஆசை படுது
நிகழ்ச்சியில் ஆஜித் பேசியதை பார்த்த நெட்டிசன்கள், இவன முதல்ல சேவ் பண்ணுங்க விஜய் டிவி, குழந்தை ஆசை படுது என்று கலாய்த்துள்ளார்.
சேவ் பண்றதே பெருசு..
ஆஜித் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆஜித் அடேய் மிக்சர் டூ மச் டா.. உன்னை சேவ் பண்றதே பெருசு இதுல லாஸ்ட்டா சேவ் பண்றாங்கன்னு உனக்கு கவலை வேற,, இதுல உத்தமர் பாலாஜி அட்வைஸ், மக்கள் உனக்காக ஓட்டு பண்றாங்க நீ இருக்கணும்னு.. என்று விளாசியுள்ளார்.
அடுத்த வாரம் நீ தான்..
ஆஜித் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், டேய் ஆஜித் என்னடா இப்டி சொல்லிட்டா அவளவுதான்.. அடுத்த வாரம் நீ தான் வெளிய என்று இப்போதே சொல்லிவிட்டார்.
கோவம் வந்துடுச்சு
ஆஜித் பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், ஆஜித் மாமாவுக்கு கோவம் வந்துடுச்சு.. அடுத்த வாரம் முதல்ல பண்ணி விட்ருங்க பாவம் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











