“இசை தான் என் ஜீவன்”.. சர்பத் மூலம் இசையமைப்பாளராகும் பிரபல இளம் பின்னணி பாடகர்!
சர்பத் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் பிரபல திரைப்பட பின்னணி பாடகரான அஜீஸ்.
சென்னை: பிரபல திரைப்பட பின்னணி பாடகரான அஜீஸ், சர்பத் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டியோ சார்பாக லலித்குமார் தயாரிக்கும் படம் சர்பத். கதிர், சூரி காம்பினேஷனில் உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்குகிறார்.

இப்படத்தில் மூலம் இசையமைப்பாளராக தனது தடத்தை அழுத்தமாக பதித்துள்ளார் பிரபல பின்னணி பாடகர் அஜீஸ். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் குழந்தைக் குரலாக ஒலித்த இவரது குரல் அப்போதே பிரபலம். சூப்பர் சிங்கர் சீசன் 2-வில் தனது குரலால் பார்வையாளர்களை வசீகரித்த அஜீஸ் தற்போது சினிமாவில் இசை அமைப்பாளராக வசீகரித்து வருகிறார்.
விரைவில் வெளியாக இருக்கிற சர்பத் படத்தில் 5 பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் அஜீஸ். வெளியாகும் முன்பே சர்பத் படத்தின் பாடல்கள் மீது பெரிய நம்பிக்கை கொண்டுள்ள அஜீஸ், "இசை தான் என் ஜீவன்" என்கிறார்.


Click it and Unblock the Notifications











