ஆஸ்திரேலிய அணியை தெறிக்க விட்ட அஜின்கியா ரகானேவுக்கு பிடித்த தமிழ்ப்படம் இதுதானாம்!
சென்னை: ஆஸ்திரேலிய மண்ணில் அந்த அணியை தெறிக்க விட்டு டெஸ்ட் தொடரை வென்ற அஜின்கியா ரகானேவுக்கு பிடித்த தமிழ்ப்படம் சூரரைப் போற்று தானாம்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய இந்திய கிரிக்கெட் அணியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
விராத் கோலியிடம் இருந்து கேப்டன் பதவியை அஜின்கியா ரகானேவிடம் கொடுக்க வேண்டும் என்றும் ஏகப்பட்ட கிரிக்கெட் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவை அலறவிட்டு
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக செயல்பட்டு வரும் அஜின்கியா ரகானே, சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை கேப்டனாக பதவியேற்று வழிநடத்தி வெற்றிப் பெற்று நாடு திரும்பியுள்ளார். இளம் படையுடன் அஜின்கியா ரகானே பெற்ற வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டினர்.

சூரரைப் போற்று தான்
சமீபத்தில், சென்னை வந்த ரகானேவிடம் தமிழ் படங்கள் அல்லது தமிழ் சீரியல்கள் ஏதும் பார்த்து இருக்கீங்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உடனடியாக சமீபத்தில் வெளியான சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை ஆங்கில சப்டைட்டில்களுடன் பார்த்தேன். எனக்கு அந்த படம் ரொம்பவே பிடித்துப் போனது என பாராட்டி உள்ளார்.

சந்தோஷத்தில் சூர்யா ரசிகர்கள்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியை வழிநடத்தும் ரகானேவும் நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பாராட்டிய தகவல் அறிந்த சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இதனை கொண்டாடி வருகின்றனர். கோல்டன் குளோப், ஆஸ்கர் போட்டியில் ஏதாவது ஒரு விருது கிடைத்தாலும் வேற லெவல் வெறித்தனமாக மாறிவிடும்.

மாஸ்டர் பார்த்தீங்களா
தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீரரான அஸ்வின், தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தீங்களா? என்கிற கேள்வியையும் அஜின்கியா ரகானேவிடம் எழுப்பியுள்ளதாக ஸ்க்ரீன் ஷாட்டுகளை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தையும் ரகானே விரைவில் பார்க்க வாய்ப்பு இருக்கு!


Click it and Unblock the Notifications











