»   »  அஜீத்தின் தம் போஸ்டர்: போலீசில் பாமக

அஜீத்தின் தம் போஸ்டர்: போலீசில் பாமக

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வரலாறு படத்தில் அஜீத் புகை பிடிப்பது போன்ற போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் போலீஸில்புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகறமாக ஓடி கொண்டிருக்கும் நடிகர் அஜீத்த்தின் வரலாறு படத்தில் அப்பாவேடத்தில் வரும் அஜீத் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த போஸ்டர்களுக்கு தடை விதிக்க வேண்டும், அஜீத், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வேலூர் காவல் நிலையத்தில் வேலூர் மாவட்ட பாமக பிரமுகரும்வக்கீலுமான ஜானகிராமன் புகார் கொடுத்துள்ளார்.

அவரது புகாரில், தீபாவளிக்கு ரிலீசான வரலாறு படத்தில் அஜீத் நடித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமார்இயக்கியுள்ளார். இந்த படம் வேலூர் தியேட்டரில் ஓடுகிறது. வரலாறு படத்துக்காக போஸ்டர்கள்ஒட்டப்பட்டுள்ளன. சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க சுவரிலும் இப்போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில் அஜீத் வாயில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மத்தியசுகாதார துறை அமைச்சகம் இது போன்ற படங்கள், தொலைக்காட்சி. சினிமாவில் இடம் பெறுவதும், பொதுஇடங்களில் இத்தகைய புகைபிடிக்கும் காட்சிகள் வைப்பதும் குற்றம் என்று புகை பொருள் தடுப்பு சட்டத்தைஇயற்றியுள்ளது.

பொது இடங்களில் புகைப்பிடிப்பது போன்ற சினிமா போஸ்டர்கள் இடம் பெறுவதால் மாணவர்கள்,இளைஞர்கள் புகை பிடிக்கும் எண்ணம் கொண்டவர்களாக மாறும் வாய்ப்புள்ளது.

எனவே நடிகர் அஜீத் மீதும், டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில்கூறியுள்ளார் ஜானகிராமன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil