அஜீத் 42: 'தல' அஜீத்தின் சரியான ஜோடி யாரு?
ஒரு படத்தில் நடித்து ஹிட் ஆகிவிட்டாலே தனக்கேற்ற கதாநாயகிகளை தேடுவார்கள் ஹீரோக்கள். ஆனால் 50 படங்கள் நடித்தும் இந்த கதாநாயகிதான் வேண்டும் என்று இதுவரை சொன்னதில்லையாம் அஜீத்.
தான் நடிக்கும் படங்களின் கதாநாயகியை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு இயக்குநர் வசம் ஒப்படைத்து விடுவாராம். இயக்குநர் ஓகே சொல்லும் நடிகையைப் பற்றி எந்த வித கருத்தும் சொல்லாமல் நடிக்க ஆரம்பித்துவிடுவாரம் அஜீத்.
சங்கவி தொடங்கி தமன்னா வரை அஜீத் உடன் எத்தனையோ நடிகைகள் நடித்திருக்கின்றனர். ஷாலினியை திருமணம் செய்வதற்கு முன்பாக பல கதாநாயகிகளுடன் கிசுகிசுக்கப்பட்டவர் அஜீத். ஆனால் திருமணத்திற்குப் பின்னர் ஒரு கிசு கிசு கூட வராத அளவிற்கு நடந்து கொண்டிருக்கிறார். அவருக்கு சரியான ஜோடி யார் என்று ரசிகர்கள் தேர்வு செய்துள்ளனர் படியுங்களேன்.

அஜீத் – சங்கவி
ஒரு ஹீரோ எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் தன்னுடன் முதலில் நடித்த ஹீரோயினியைப் பற்றி ஏதாவது ஓரு பேட்டியில் குறிப்பிட்டு சொல்வதுண்டு. அஜீத் உடன் நடித்த முதல் கதாநாயகி சங்கவி பற்றி சன்டிவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் அஜீத்.

அஜீத் - சுவாதி
அறிமுக காலத்தில் வான்மதி படத்தில் நடித்த சுவாதி அடுத்தடுத்து அஜீத் உடன் ஜோடி சேர்ந்தார். இருவருக்கும் இடையே காதல் என்று கூட ஊடகங்களில் கிசு கிசு வெளியானது. அந்த அளவிற்கு படத்தின் ரொமான்ஸ் காட்சிகளில் நெருக்கம் காட்டினார்கள்.

தேவயானியின் காதல் கோட்டை
தேவயானியுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறார் அஜீத். ஆனாலும் காதல் கோட்டையில் இருவரும் செம ஜோடி என்று பாராட்டினார்கள்.

அஜீத் – ஹீரா
காதல் கோட்டையில் ஹீராவின் காதலை ஏற்காத அஜீத் நிஜ வாழ்க்கையில் ஹீராவை காதலித்ததாக அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

அஜீத் – சிம்ரன்
அவள் வருவாளா, வாலி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஜோடி சேர்ந்திருக்கின்றனர். இவர்களின் ரொமான்ஸ் ரசிகர்களை அதிகம் ரசிக்க வைத்துள்ளது.

அஜீத் – ஜோதிகா
வாலி, முகவரி என நடித்திருந்தாலும் அதிக அளவில் அஜீத் உடன் ஜோதிகா. நெருக்கம் காட்டியதில்லை

அஜீத் – த்ரீஷா
ஜீ, கிரீடம், மங்காத்தா போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தவர் த்ரீஷா. இவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஓர்க் அவுட் ஆகியிருக்கிறது.

அஜீத் - நயன்தாரா
பில்லா படத்தில் நயன்தாரா உடன் நடித்தார் அஜீத். ஆனால் காதல் காட்சிகள் அதிகம் இல்லை. இப்போது விஷ்ணுவர்த்தன் படத்தில் மீண்டும் இணைந்திருக்கின்றனர் ஜோடி எப்படி என்று படம் வந்த பின்னர் பார்க்கலாம்.

அஜீத் – ஷாலினி
அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த போது இதுதான் சரியான ஜோடி என்று சூட்டிங் பார்க்க வந்தவர்களே பாராட்டினார்களாம். கடையில் ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











