அஜீத் 42: டாப் அஜீத் படங்கள்.. ஒரு பார்வை
அஜீத் பிறந்தநாளுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. 42 வயதாகும் அஜீத் சினிமாவிற்கு வந்து 20 வருடங்கள் நிறைவடையப் போகிறது. அமராவதியில் தொடங்கிய அஜீத்தின் திரை உலகப் பயணத்தில் பல ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
சாக்லேட் பாய் தோற்றத்தில் இருந்த அஜீத் அதிரடி ஆக்சன் படங்களில் நடிக்க ஆரம்பித்தப் பின்னர் ரசிகர்களால் 'தல' என்று கொண்டாடப்படுகிறார்.
அமாராவதி தொடங்கி பில்லா 2 வரை ரசிகர்களுக்கு பிடித்த அஜீத் படங்களைப் பற்றிய ஒரு பார்வை.

காதல் மன்னன்
காதல் மன்னன் படத்தில் அஜீத்தின் காதல் நடிப்பு வெளிப்பட்டது. கல்லூரி ரசிகர்களையும், ரசிகைகளையும் ஈர்த்தது.

ஆசை நாயகன்
ஆசை படத்தில் அழகான அஜீத் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

அமர்க்களம்
எத்தனையோ ஜோடியுடன் நடித்திருந்தாலும் ஷாலினியுடன் ஜோடி சேர்ந்த அமர்க்களம் திரைப்படம் அதிக அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

‘தல’ தீனா
தீனா படத்தில் அடியாளாக நடித்த அஜீத்திற்கு தல பட்டம் கிடைத்தது. அதுவே அவருக்கு நிரந்தர செல்லப் பெயராகிப் போனது.

வாலியில் வில்லன்…
சாக்லேட் ஹீரோவாகி பின்னர் ஆக்சன் ஹீரோவாக உயர்ந்த அஜீத், வாலி படத்தில் வில்லனாகவும் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

வில்லன் நாயகன்
வில்லன் படத்தில் ஊனமுற்ற அஜீத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

வரலாறு படைத்த அஜீத்
நாட்டியக்கலைஞராக நடித்த அஜீத் மூன்று வேடங்களில் நடித்து அசத்திய வரலாறு படம் தனி சாதனை படைத்தது.

சிறப்புத் தோற்றம்
இந்தப் படங்களைத் தவிர உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், நீ வருவாய் என ஆகிய படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த அஜீத்திற்காகவே இந்தப் படங்கள் ஓடின.


Click it and Unblock the Notifications











