அஜீத்தின் அடுத்த பட பட்ஜெட் 86 கோடியாம்!!
என்னை அறிந்தால் படத்துக்குப் பிறகு, அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பட்ஜெட் 86 கோடி என்கிறார்கள்.
இந்தப் படத்தை வீரம் படம் தந்த சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜீத். இது அவருக்கு 56வது படமாகும்.
இப்படத்தில் ஸ்ருதி ஹாசன், சமந்தா உள்ளிட்டோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் சிவா தரப்பில் இருந்தோ, அல்லது அஜித் தரப்பிலிருந்தோ வரவில்லை.

இது குறித்து சமீபத்தில் பதிலளித்த இயக்குநர் சிவா படத்தின் கதாநாயகிகள் மற்றும் இதர நடிகர்கள் குறித்தோ, மேலும் இசை உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ இன்னும் முடிவாகவில்லை என கூறியுள்ளார்.
ஆனால் படம் ரூ .86 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இது மட்டும் உண்மையாக இருந்தால், அஜீத் படங்களில் அதிகபட்ச பட்ஜெட் கொண்ட படம் இதுவாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications











