அஜித்தின் அடுத்த பட டைரக்டர் யார் தெரியுமா? #Ajith59
Recommended Video

சென்னை : நடிகர் அஜித் நான்காவது முறையாக சிறுத்தை சிவாவுடன் கூட்டணி அமைத்து நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படம் பற்றிய புதிய தகவல்கள் கசிந்து வருகின்றன.
'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விசுவாசம்
சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'விசுவாசம்' படத்தின் ஷூட்டிங் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

அஜித் 59
அஜித் நான்காவது முறையாக சிவாவுடன் கூட்டணி அமைத்து 'விசுவாசம்' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படத்தினைப் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. வெற்றிப்படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறாராம் அஜித்.

ஹெச்.வினோத்
'விவேகம்' படத்திற்கு முன் அஜித்திடம் 'சதுரங்க வேட்டை' பட இயக்குனர் ஹெச்.வினோத் ஒரு கதை சொல்லியிருக்கிறார். தற்போது அவருடைய கதைக்கு அஜித் ஓகே சொல்லியிருப்பதால் 'விசுவாசம்' படத்திற்கு பிறகு இந்தக் கூட்டணியின் படம் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

படக்குழு தேர்வு
தற்போது ஹெச்.வினோத் இயக்கும் அஜித்தின் 59-வது படத்திற்கான நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் வேலைகள் நடந்து வருகிறதாம். படக்குழுவினர் தேர்வானதும், இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











