“அஜித்62“ வெறித்தனமான அப்டேட்… பிரபல இயக்குனருக்கு அடித்தது லக்கி பிரைஸ்!

சென்னை : அஜித் 62 திரைப்படம் குறித்த முக்கியமானத் தகவல் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Recommended Video

'AK62' அஜித்தை இயக்கும் விக்னேஷ் சிவன்… திரைபிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!

போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கி இருந்த நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்று கலவையான விமர்சனங்களை பெற்றது.

அஜித் அந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். அந்த படம் அஜித்தின் ரசிகர்களுக்கு திருப்தியைத் தரவில்லை. இதனால் ரசிகர்கள் வலிமை படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

நேர்கொண்டபார்வை

நேர்கொண்டபார்வை

நேர்கொண்டப்பார்வையில் இணைந்த அதே கூட்டணி வலிமை படத்திலும் கைகோர்த்தன.படம் தொடங்கிய நாள் முதலே கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனால், ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டுகளை கேட்டு கேட்டு சலித்துப்போனார்கள்.

வலிமை

வலிமை

இதையடுத்து,கடந்த மாதம் வலிமைத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இப்படத்தில் ஹுமா குரோஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என பல நடிகர்கள் நடித்திருந்தனர். போதை கடத்தலைப் பற்றிய படம் என்றாலும், இத்திரைப்படத்தில் அம்மா, தம்பி சென்டிமென்ட் அதிகமாவே இருந்தது. மேலும்,பைக் ரேஸ், சண்டை காட்சி என அனைத்திலும் டூப் இல்லாமல் அஜித் மிரட்டி இருந்தார். இதனால், வலிமை படத்தை பலரும் பாராட்டினர்.

அஜித்61

அஜித்61

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித், போனிகபூர், வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.. அஜித் 61 வது படத்தில் இணைந்துள்ள இந்தக்கூட்டணி குறித்து புதிய லுக்குடன் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அஜித் 62

அஜித் 62

இந்த நிலையில் லைக்கா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித்62 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு படத்தை உறுதி செய்துள்ளது. அஜித்துடன் முதன்முதலாக இணைய உள்ளதை அடுத்து தாங்கள் நிறுவனம் பெருமை கொள்வதாகவும் அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

எல்லாம் இனிமேல் நல்லாத்தான் நடக்கும்

எல்லாம் இனிமேல் நல்லாத்தான் நடக்கும்

அஜித்தின் 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில்,எல்லாம் இனிமேல் நல்லாத்தான் நடக்கும், காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும் என்று கூறி இந்த வாய்ப்பை அளித்த லைக்கா நிறுவனத்தின் நன்றியை தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X