“அஜித்62“ விக்னேஷ் சிவன் வாங்கும் சம்பளம்…ஷாக்கான ரசிகர்கள் !

சென்னை : அஜித் 62 திரைப்படத்தை இயக்க விக்னேஷ் சிவன் வாங்கி உள்ள சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் அஜித்தை வைத்து எச்.வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் வென்று கலவையான விமர்சனங்களை பெற்றது.

அஜித் அந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார். இருந்தாலும், அந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இதனால், ரசிகர்கள் வலிமை படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்டப் பார்வையில் இணைந்த அதே கூட்டணி வலிமை படத்திலும் கைகோர்த்தன. படம் தொடங்கிய நாள் முதல் கொரோனா தீவிரமடைந்ததை அடுத்து படப்பிடிப்பு தொடர்ந்து நடத்த முடியாமல் போனது. இதனால்,ரசிகர்கள் வலிமை பட அப்டேட்டுகளை கேட்டு கேட்டு சலித்துப் போனார்கள்.

வலிமை

வலிமை

இதையடுத்து,கடந்த மாதம் வலிமைத் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இப்படத்தில் ஹுமா குரோஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா என பல நடிகர்கள் நடித்திருந்தனர். போதை கடத்தலைப் பற்றிய படம் என்றாலும், இத்திரைப்படத்தில் அம்மா, தம்பி செண்டிமென்ட் அதிகமாகவே இருந்தது. மேலும்,பைக் ரேஸ், சண்டை காட்சி என அனைத்திலும் டூப் இல்லாமல் அஜித் மிரட்டி இருந்தார். இதனால், வலிமை படத்தை பலரும் பாராட்டினர்.

அஜித்61

அஜித்61

வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அஜித், போனிகபூர், வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.. அஜித் 61 வது படத்தில் இணைந்துள்ள இந்தக் கூட்டணி குறித்து புதிய லுக்குடன் அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

அஜித் 62

அஜித் 62

அஜித் 61 திரைப்படத்தை அடுத்து, அஜித் 62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இந்த திரைப்படத்தை இயக்க விக்னேஷ் சிவன் 50 லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைக்கேட்டு ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். மேலும், அஜித் 62 திரைப்படத்திற்காக அஜித் 100 கோடி ரூபாயை சம்பளமாக கேட்டதாகவும், தயாரிப்பு நிறுவனம் 105 கோடி சம்பளம் தருவதாக கூறியுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X