அஜித்64 பத்தி அடுத்தடுத்த அப்டேட்... மதுரை கேங்ஸ்டர் படமா உருவாக இருக்காம்!
சென்னை : நடிகர் அஜித் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கையை தளர்த்திக் கொண்டுள்ளார். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்துவரும் அவர் அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் வலிமை
நடிகர் அஜித்தின் வலிமை படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலை வாரிக் குவித்துள்ளது. படத்தில் பைக் ரேசிங் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாக இருந்த நிலையிலும் இந்தப் படம் அஜித் ரசிகர்களை மட்டுமின்றி பேமிலி ஆடியன்சையும் வெகுவாக கவர்ந்தது.

200 கோடி ரூபாய் க்ளப்
தொடர்ந்து உலகளவில் அதிகமாக வசூல் சாதனையை எட்டிய வலிமை படம் 200 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. தொடர்ந்து வசூலை சாதனை புரிந்தது. தற்போது ஓடிடியிலும் ரிலீஸ் செய்யப்பட்டு அங்கும் அதிகமான நேரம் பார்க்கப்பட்ட படம் என்ற சாதனையையும் செய்துள்ளது.

விரைவில் ஏகே61 படத்தின் சூட்டிங்
இந்நிலையில் அடுத்ததாக ஹெச் வினோத் -போனி கபூர் கூட்டணியிலேயே அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். ஏகே 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் 11ம் தேதி துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்
இதை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் தனது ஏகே62 படத்தில் இணையவுள்ளார். படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில் படத்தை லைகா தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான முன்கட்ட பணிகளை தற்போது விக்னேஷ் சிவன் துவக்கியுள்ளார்.

கொள்கையை தளர்த்திய அஜித்
ஒரு கட்டத்தில் ஒரு படத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்ற தனது நீண்டநாள் கொள்கையை தற்போது தளர்த்திக் கொண்டுள்ளார் அஜித். இதன்மூலம் அடுத்தடுத்த பிராஜக்ட்களில் தன்னை இணைத்து வருகிறார். விக்னேஷ் சிவன் படத்திற்கு பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் 5வது முறையாக அவர் இணையவுள்ளார்.

ஏகே64 படத்தை உறுதி செய்த அஜித்
இதை தொடர்ந்து அவரது 64வது படமும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள் படத்தை இயக்கிய ஸ்ரீகணேஷ் சொன்ன கதை பிடித்துப் போக அஜித் அதையும் ஓகே செய்து விட்டாராம். மதுரையை மையமாக கொண்ட கேங்ஸ்டர் கதையாக இந்தக் கதை உருவாக உள்ளது.

பாட்ஷா டைப் கதை?
படத்தில் அஜித்திற்கு பிளாஷ்பேக் காட்சிகள் உள்ளதாம். அதில் அவருக்கு மகன் கேரக்டர் உள்ளதாகவும் அவருக்காக தனது கெட்ட விஷயங்களை விட்டுவிடுவதாகவும் கதை செல்லும் என்று கூறப்படுகிறது. ரஜினியின் பாட்ஷா டைப் கதையாக இந்தப் படம் உருவாக உள்ளது. வரும் செப்டம்பரில் படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அஜித்தின் ஜோடியாக ஷாம்னா
படத்தில் மாநகரம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த எஸ்கே செல்வகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஷாம்னா காசிம் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவருக்கு சிறிய கதாபாத்திரம்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











