Ajith: சென்னை திரும்பிய அஜித்... ‘சார் அந்த விடாமுயற்சி அப்டேட்’... சுற்றி வளைத்த ரசிகர்கள்!
சென்னை: அஜித்தின் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.
கடந்த மார்ச் மாதமே தொடங்க வேண்டிய ஏகே 62 ஷூட்டிங், விக்னேஷ் சிவன் வெளியேற்றத்தால் தாமதமானது.
இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானாலும் அஜித் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தார்.
இந்நிலையில், துபாயில் இருந்து சென்னை திரும்பிய அஜித்திடம், விடாமுயற்சி அப்டேட் கேட்டு ரசிகர்கள் துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை திரும்பிய அஜித்: கோலிவுட் அல்டிமேட் ஸ்டார் அஜித்தின் துணிவு திரைப்படம், கடந்த பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அஜித் உடனடியாக தனது 62வது படத்தில் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. இந்தப் படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கவிருந்தார். ஆனால், திடீரென ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் தூக்கியடிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இதனால் மார்ச் மாதமே ஆரம்பிக்க வேண்டிய ஏகே 62 ஷூட்டிங் இப்போது வரை தொடங்கவில்லை. கதை, திரைக்கதை எழுதுவதற்காக மகிழ் திருமேனிக்கு டைம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சைட் கேப்பில் வழக்கம் போல பைக் டூர் சென்றுவிட்டார் அஜித். ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என்ற அப்டேட் வெளியானபோது கூட வெளிநாட்டில் பைக் ட்ரிப் செய்துகொண்டிருந்தார் அஜித்.
இருப்பினும் விரைவில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், நேபாளம், பூடான் சென்ற அஜித், அதன்பின்னர் நார்வே பறந்துவிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த இரு தினங்களாக துபாயில் வலம் வந்த அஜித், தற்போது சென்னை திரும்பிவிட்டார். நள்ளிரவு சென்னை வந்திறங்கிய அஜித்தை அவரது ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். அதோடு இல்லாமல் விடாமுயற்சி அப்டேட்டும் கேட்டு அதகளம் செய்தனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள விடாமுயற்சி படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இதுதவிர மற்ற அப்டேட்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், பட்ஜெட் பிரச்சினை காரணமாக விடாமுயற்சி படத்தை லைகா ட்ராப் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது. மேலும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால், இது உண்மையான தகவல் இல்லையென்றும், விடாமுயற்சி படத்தை லைகா தான் தயாரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித் தற்போது சென்னை திரும்பிவிட்டதால் எப்போது வேண்டுமானாலும் விடாமுயற்சி படத்திற்கான பூஜைகள் போடப்படும் எனவும், அதன் தொடர்ச்சியாக விரைவில் ஷூட்டிங் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











