Ajith: ஷாலினி இடத்தில் இருந்திருக்க வேண்டியது இந்த நடிகையா..? அஜித்தை இப்படி மிஸ் பண்ணிட்டாங்களே!

சென்னை: அஜித் தற்போது லைகா தயாரிக்கும் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார்.

அமராவதி படம் மூலம் அறிமுகமான அஜித், யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் இன்று மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார்.

அதேபோல், அமர்க்களம் படத்தில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், ஷாலினியை காதலிப்பதற்கு முன்பாக அஜித் இன்னொரு நடிகையை திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்தாராம்.

 Ajith: Actor Ajith wanted to marry actress Swathi before Shalini

அஜித்தை மிஸ் செய்த பிரபல நடிகை: 1993ம் ஆண்டு வெளியான அமராவதி திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அஜித். எந்தவித சினிமா பின்புலமும் இல்லாத குடும்பத்தில் இருந்து திரையுலகில் அடியெடுத்து வைத்த அஜித், 30 ஆண்டுகளில் கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக மிரட்டி வருகிறார். தமிழ்நாட்டில் ரசிகர் மன்றமே இல்லாத ஒரு நடிகருக்கு பல லட்சம் ரசிகர்கள் இருப்பது இவருக்கு தான்.

சரண் இயக்கிய அமர்க்களம் படத்தில் நடித்த போது அதில் நாயகியாக நடித்த ஷாலினியை காதலித்தார் அஜித். ஷாலினியும் அஜித்துக்கு சம்மதம் சொல்ல, இருவீட்டாரும் அவர்களது காதலுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்தனர். பின்னர் 2000ம் ஆண்டு அஜித்தும் ஷாலினியும் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்வில் 23 ஆண்டுகளை கடந்துவிட்ட இந்த நட்சத்திர தம்பதியினருக்கு ரசிகர்களிடம் அளவுகடந்த மரியாதை உள்ளது.

கடந்த மாதம் இருவரும் தங்களது திருமண நாளை ஜோடியாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதுவரை எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காத அஜித், ஷாலினிக்கு முன்பு இன்னொரு நடிகையை துரத்தி துரத்தி காதலித்ததாக சொல்லப்படுகிறது. அஜித் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான திரைப்படம் வான்மதி. இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நடித்தவர் சுவாதி. விஜய்யுடன் தேவா, வசந்த வாசல், செல்வா ஆகிய படங்களில் நடித்துள்ள சுவாதி, அஜித்துடன் வான்மதி, உன்னைத் தேடி படங்களில் நடித்துள்ளார்.

 Ajith: Actor Ajith wanted to marry actress Swathi before Shalini

இதில் வான்மதி படத்தில் நடித்த போது சுவாதியை காதலித்துள்ளார் அஜித். ஆனால், அப்போது அவர் பெரிய ஹீரோ இல்லையென்பதால், சுவாதியின் அம்மா அஜித் காதலுக்கு தடையாக இருந்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் அஜித்திடம் தன் மகள் சுவாதியை தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் கண்டிப்புடன் கூறியுள்ளார். அதன்பின்னர் தான் சுவாதியுடன் பேசுவதை நிறுத்தினாராம் அஜித். காலம் கடந்து செல்ல அஜித்தின் காதல் மனைவியாக ஆகும் கொடுப்பினை ஷாலினிக்கு அமைந்துள்ளது.

 Ajith: Actor Ajith wanted to marry actress Swathi before Shalini

இதனிடையே காதல் கோட்டை படத்தில் நடித்த போது, நடிகை ஹீரா அஜித்தை காதலிப்பதாக ப்ரொப்போஸ் செய்துள்ளார். ஆனால், அஜித் அவருக்கு நோ சொல்லிவிட்டதாக தெரிகிறது. இப்போது ஷாலினியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் அஜித், சுவாதியின் அம்மா சொன்னதைவிடவும் மாஸ் ஹீரோவாக கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X