Ajith: ‘ஜெயிலர் என்ன ஜெயிலர்..’ ரிலீஸுக்கு முன்பே கார் கிஃப்ட்... இதுக்கெல்லாம் விதை போட்டது அஜித்!
சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினி, நெல்சனுக்கு கார் பரிசளித்தார் கலாநிதி மாறன்.
மாமன்னன் படத்தின் வெற்றிக்காக அதன் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசாக வழங்கப்பட்டது.
அதேபோல், வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்புவுக்கும், விக்ரம் சூப்பர் ஹிட்டானதால் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் கார்கள் பரிசாக கிடைத்தன.

இந்த வழக்கத்தை 1999ம் ஆண்டே அறிமுகப்படுத்தியது அஜித் தான் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விதை அஜித் போட்டது: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. மூன்று வாரங்களில் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ள ஜெயிலர், வரும் 7ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடியிலும் வெளியாகிறது. இதனிடையே ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினிக்கு 1.5 கோடி மதிப்பிலான BMW X7 காரும், இயக்குநர் நெல்சனுக்கு 1.5 கோடி ரூபாய் மதிப்புடைய Porsche காரும் பரிசாக கொடுத்தார் கலாநிதி மாறன்.
இதற்கு முன்பாக மாமன்னன் படத்தின் வெற்றிக்காக இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு மினி கூப்பர் கார் பரிசாக வழங்கப்பட்டது. உதயநிதி, வடிவேலு, ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனால், இயக்குநர் மாரி செல்வராஜ்ஜுக்கு சுமார் 50 லட்சம் மதிப்பிலான மினி கூப்பர் காரை பரிசாக கொடுத்தார் உதயநிதி.
அதேபோல், வெந்து தணிந்தது காடு படத்திற்காக ஹீரோ சிம்புவுக்கு 90 லட்சம் மதிப்பிலான டொயோட்டோ காரை பரிசாக கொடுத்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். முன்னதாக விக்ரம் திரைப்படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்ததால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜுக்கு 80 லட்சம் மதிப்பிலான லம்போகினி காரை பரிசாக கொடுத்தார் கமல்ஹாசன். இதன் பின்னரே வெந்து தணிந்தது காடு, மாமன்னன், ஜெயிலர் படங்களின் வெற்றிக்காக கார் பரிசளிக்கும் நிகழ்வுகள் தொடர்கதையாகி உள்ளது.
ஆனால், இதற்கெல்லாம் 1999ம் ஆண்டிலேயே விதை போட்டவர் அஜித் தான் என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ஜே சூர்யா இயக்குநராக அறிமுகமான வாலி திரைப்படம் 1999ம் ஆண்டு வெளியானது. இதில் ஹீரோவாக நடித்த அஜித், வாலி ரிலீஸாகும் முன்பே எஸ்ஜே சூர்யாவுக்கு சாண்ட்ரோ கார் கிஃப்ட்டாக கொடுத்தார். வாலி ஷூட்டிங் தொடங்கும் முன்பு பைக்கும் வாங்கிக் கொடுத்துள்ளார். இதனை சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது எஸ்ஜே சூர்யா கூறியிருந்தார். இந்த வீடியோவை தேவர் மகன் சிவாஜி, கமல் பேசும் மீம்ஸ் உடன் எடிட் செய்து அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











