Ajith: “பைக் ட்ரிப் ஓவர்... அடுத்து சைக்கிளில் கிளம்பிய அஜித்..” அசர வைக்கும் லேட்டஸ்ட் க்ளிக்!
சென்னை: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித், தற்போது தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.
விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ள இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.

இன்னும் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்காத நிலையில், அதுகுறித்து லைகா சுபாஸ்கரன் சூப்பரான அப்டேட் கொடுத்திருந்தார்.
இதனிடையே வழக்கமாக பைக் டூர் செல்லும் அஜித், திடீரென சைக்கிளில் ஊர் சுற்ற கிளம்பியது வைரலாகி வருகிறது.
சைக்கிளில் டூர் கிளம்பிய அஜித்: கோலிவுட்டின் அல்டிமேட் ஸ்டார் அஜித், கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். கடந்த ஜனவரியில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்து மாஸ் காட்டியது. இதனால் அஜித்தின் 62வது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அஜித் தனது 62வது படத்தை லைகா தயாரிப்பில் நடிக்க கமிட்டாகியிருந்தார்.
துணிவு வெளியானதும் ஏகே 62 ஷூட்டிங் தொடங்கவிருந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேற, அவருக்குப் பதிலாக இயக்குநர் மகிழ் திருமேனி கமிட்டானார். இதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி ஏகே 62 ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கவில்லை. ஆனால் மே 1ம் தேதி அஜித் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என அறிவிப்பு வெளியானது.
விடாமுயற்சி படப்பிடிப்பு உடனடியாக தொடங்காததால், அஜித் பைக் டூர் சென்றுவிட்டார். நேபாளம், பூடான், நார்வே என ஜாலியாக ட்ரிப் அடித்த அஜித், இறுதியாக துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இதனால் உடனடியாக விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். அதனை உறுதிப்படுத்தும்விதமாக சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் விடாமுயற்சி அப்டேட் கொடுத்தார் லைகா சுபாஸ்கரன்.
அதன்படி, விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அறிவித்தார். மேலும் விடாமுயற்சி லைகாவின் மிக முக்கியமான ப்ராஜக்ட் என்றும் அவர் கூறியிருந்தார். இதனால், விடாமுயற்சி ஷூட்டிங் அப்டேட் வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு, அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எப்போதும் பைக்கில் டூர் செல்லும் அஜித், இந்த முறை சைக்கிளில் கிளம்பிவிட்டார். ஒயிட் ஷர்ட், தலையில் ஹெல்மெட் அணிந்து அஜித் சைக்கிள் ஓட்டும் இந்த போட்டோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. "பைக்கில் டூர் போனாலே மாதக் கணக்கில் ஊர் சுற்றுவார். இதுல இப்போ சைக்கிளில் ட்ரிப் சென்றால் இப்போதைக்கு விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்காது" என்பதாக ஜாலியாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











