Ajith: “நான் மீசை வச்ச குழந்தையப்பா..” குட்டீஸ்களுடன் சைக்கிளிங்... ட்ரெண்டாகும் அஜித்தின் வீடியோ!

சென்னை: கடந்த சில மாதங்களாக வெளிநாடுகளில் பைக் ட்ரிப் சென்றிருந்தார் அஜித்.

நேபாளம், பூடான், நார்வே நாடுகளுக்கு சென்றிருந்த அஜித், சமீபத்தில் சென்னை திரும்பினார்.

அதேநேரம் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்திருந்தார்.

இந்நிலையில், குழந்தைகளுடன் குழந்தையாக மாறிய அஜித், அவர்களுடன் சைக்கிளிங் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

 Ajith: Actor Ajiths cycling with the kids Video is trending now

சுட்டிக் குழந்தையாக மாறிய அஜித்: அஜித் தனது 62வது படமான விடாமுயற்சியில் நடிக்கவுள்ளார். லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாம். அஜித் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விடாமுயற்சி படத்தின் மேக்கிங் உட்பட அனைத்திலும் பல புதுமைகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. அஜித் பிறந்தநாளில் ஏகே 62 டைட்டில் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் இப்போது வரை இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்கவில்லை. ஸ்க்ரிப்ட் வேலைகள் முடியும் வரை அஜித் வழக்கம் போல பைக் டூர் சென்றுவிட்டார். நேபாளம், பூடான், நார்வே என ஜாலியாக ட்ரிப் அடித்த அஜித், இறுதியாக துபாய் வழியாக சென்னை திரும்பினார். ஒவ்வொரு முறையும் பைக் டூர் முடித்துவிட்டு அஜித் சென்னை வரும் போது, விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

 Ajith: Actor Ajiths cycling with the kids Video is trending now

இதுவரை அப்படி நடக்கவில்லை என்றாலும், இந்த முறை கண்டிப்பாக விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கும் என லைகா தரப்பில் இருந்தே அப்டேட் வெளியாகிவிட்டது. சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் லைகா சுபாஸ்கரன் விடாமுயற்சி ஷூட்டிங் குறித்து பேசியிருந்தார். இதனிடையே எப்போதும் பைக்கில் ட்ரிப் அடிக்கும் அஜித், இந்தமுறை சைக்கிளில் கிளம்பிவிட்டார். குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சைக்கிளிங் நிகழ்ச்சியில் அஜித்தும் பங்கேற்றார்.

அப்போது அவரும் குழந்தைகளுடன் குழந்தையாக சைக்கிளில் ரவுண்ட் அடித்தது அங்கிருந்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளும் அஜித்துடன் செம்ம ஜாலியாக ரவுண்ட் அடித்து என்ஜாய் செய்தனர். குழந்தைகளுடன் அஜித் விளையாட்டாக போட்டிப் போட்டு சைக்கிள் ஓட்டியதும் ரசிக்க வைத்துள்ளது. ஒயிட் ஷர்ட், தலையில் ஹெல்மெட் அணிந்து அஜித் சைக்கிள் ஓட்டும் இந்த வீடியோ டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அஜித் எப்பவும் மீசை வச்ச குழந்தை தான் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அதேபோல், சீக்கிரமே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அப்டேட் சொல்லுங்க எனவும் கேட்டு வருகின்றனர். எப்போதும் பைக்கில் வலம் வரும் அஜித், குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிச் செல்வதை பார்க்க க்யூட்டாக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X