Ajith: உலகம் சுற்றும் வாலிபன்... துபாய் பறந்த அஜித்... விடாமுயற்சி அப்டேட்லாம் வாய்ப்பே இல்ல ராசா!

துபாய்: அஜித் தற்போது தனது 62வது படமான 'விடாமுயற்சி'- இல் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை.

ஆனாலும் விடாமுயற்சி அப்டேட் விரைவில் வரும் என அஜித் ரசிகர்கள் அதிக நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நார்வே நாட்டிற்கு பைக் டூர் சென்றிருந்த அஜித், அதற்போது துபாயில் வலம் வரும் போட்டோ ட்ரெண்டாகி வருகிறது.

 Ajith: Actor Ajiths latest photo in Dubai is trending now

கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனது ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்துவிட்ட பிறகும் அவரது ஃபேன்ஸ் இன்னும் அடங்கியதாக தெரியவில்லை. அஜித்தின் பலமே அவரது ரசிகர்கள் தான் என்பது பலரும் அறிந்ததே. அதனால் தான் அஜித் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப் பெரிய ஓபனிங் கிடைத்து வருகிறது.

இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸான துணிவு திரைப்படம், அஜித்துக்கு தரமான கம்பேக்காக அமைந்தது. விஜய்யின் வாரிசுக்குப் போட்டியாக ரிலீஸான நிலையிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலில் துணிவு ருத்ரதாண்டவம் ஆடியது. இதனால் அஜித்தின் 62வது படம் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமானது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த ஏகே 62 படத்தை தற்போது மகிழ் திருமேனி டைரக்ட் செய்யவிருக்கிறார்.

அதன்படி, ஏகே 62 படத்துக்கு விடாமுயற்சி என டைட்டில் கன்ஃபார்ம் ஆனதுடன், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அஜித் தொடர்ச்சியாக பைக் டூர் சென்றுகொண்டிருப்பதால் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இதனிடையே ஆகஸ்ட் மாதம் இறுதியில் விடாமுயற்சி ஷூட்டிங் தொடங்கிவிடும் என சொல்லப்பட்டது. எனவே நார்வே சென்றிருந்த அஜித், விரைவில் சென்னை திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

 Ajith: Actor Ajiths latest photo in Dubai is trending now

இதனிடையே ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவிருந்த விடாமுயற்சி படத்தின் பூஜை கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. ஆனாலும் விரைவில் விடாமுயற்சி அப்டேட் வெளியாகும் என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோல், அஜித்தும் சென்னை வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் தற்போது துபாய் சென்றுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

நார்வேயில் இருந்து துபாய் சென்றுள்ள அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் செம்ம மாஸ் காட்டும் அஜித்தை, ரசிகர் ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார். இதனால் இப்போதைக்கு அஜித் சென்னை திரும்ப வாய்ப்பில்லை என்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் விடாமுயற்சி படப்பிடிப்பும் சரியான நேரத்தில் தொடங்குமா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X