Ajith: ரசிகர்களை குழப்பும் அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்... அதுக்குள்ள என்ன இப்படி ஆளே மாறிட்டாரு..?
ஒஸ்லோ: கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அஜித், விரைவில் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இப்படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்காத நிலையில், நார்வே நாட்டிற்கு பைக் டூர் சென்றுள்ளார் அஜித்.
அங்கு அவர் எடுத்துக்கொண்ட போட்டோ, அஜித் ரசிகர்களை ரொம்பவே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்களை குழப்பும் அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்: அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. பொங்கல் ஓபனிங்கில் விஜய்யின் வாரிசு படத்துக்கு டஃப் கொடுத்த துணிவு, பாக்ஸ் ஆபிஸில் 350 கோடிக்கும் மேல் வசூலித்தது. இதனால், அவரது அடுத்த படமான ஏகே 62 மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை, விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி இயக்கவுள்ளார்.
மே மாதமே தொடங்கும் என சொல்லப்பட்ட விடாமுயற்சி ஷூட்டிங், இன்னும் அதற்கான சின்ன அறிகுறிகள் கூட தென்படவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் மாதம் விடாமுயற்சி ஷூட்டிங் உறுதியாக தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகின. ஆனால், அஜித்தோ நார்வே நாட்டிற்கு பைக் டூர் சென்றுவிட்டார். தொடர்ச்சியாக பைக் ட்ரிப் செல்வதிலேயே அஜித் அதிகம் ஆர்வம் காட்டி வருவது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதனால் விடாமுயற்சி படம் ட்ராப் ஆனாலும் ஆகும் என அஜித் ரசிகர்களே நம்பிக்கை இல்லாமல் பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து அஜித் வெளியேறிய வீடியோஸ் சோஷியல் மீடியாக்களில் வைரலாகின. ப்ளூ ஜூன்ஸ், ரெட் கலர் டீ-ஷர்ட் அணிந்தபடி செம்ம ஸ்டைலிஷாக இருந்தார் அஜித். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர்.
ஆனால், இதில் அஜித்துக்கு தொப்பை இருப்பதாகவும், அவர் விடாமுயற்சி படத்துக்காக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வதாக சொன்னதெல்லாம் பொய்யா என்றும் வலைப்பேச்சு அந்தணன் ட்ரோல் செய்திருந்தார். இதற்கு அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில், தற்போது நார்வே சென்றுள்ள அஜித், அங்கு ரசிகர் ஒருவருடன் போட்டோ எடுத்துள்ளார். அதில், அஜித் ஸ்லிம்மாக இருப்பதுடன், ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த மோடில் காணப்படுகிறார்.
சில தினங்களுக்கு முன்னர் உடல் எடை அதிகமாக இருப்பது போல் தோற்றமளித்த அஜித், திடீரென ஸ்லிம்மாக மாறியது ரசிகர்களையே குழம்ப வைத்துள்ளது. படத்திற்காக மேக்கப் போட்டு கெட்டப் சேஞ்ச் செய்வது போல, அஜித் ரியலாகவே அசால்ட் செய்து வருகிறாரே என ரசிகர்கள் துதி பாடி வருகின்றனர். இந்த மாற்றம் எல்லாம் விடாமுயற்சி படத்துக்காக தான் எனவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் விடாமுயற்சி ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











