Ajith: “விடாத விடாமுயற்சி சோகம்... வாடிய முகத்துடன் அஜித்..” என்ன இப்படி ஆகிட்டாரு..?
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
அதனைத் தொடர்ந்து அஜித் கமிட்டான ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
மகிழ் திருமேனி இயக்கவுள்ள இந்தப் படத்திற்கு விடாமுயற்சி என டைட்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை.
விடாமுயற்சி குறித்த அப்டேட் எதுவும் வெளியாகாத சோகத்தில் அஜித் வாடிய முகத்துடன் இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

வாடிய முகத்துடன் அஜித்: கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் முக்கியமானவர் அஜித். அவரது நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு, பாசிட்டிவான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றது. அஜித்தின் கம்பேக் படமாக அமைந்ததால், அடுத்து அவரது 62வது படம் பற்றி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்பட்டது. துணிவு வெளியாகும் முன்பே அஜித்தின் ஏகே 62 இயக்குநர் விக்னேஷ் சிவன் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விக்னேஷ் சிவனின் ஸ்கிரிப்ட்டில் திருப்தி இல்லாத லைகா நிறுவனம், அவரை தூக்கிவிட்டு மகிழ் திருமேனிக்கு வாய்ப்பு கொடுத்தது. இதனால், ஏகே 62 கதை, திரைக்கதை வேலைகளில் கொஞ்சம் தாமதமானதால் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஆனால், அஜித்தின் பிறந்தநாளில் ஏகே 62 டைட்டில் 'விடாமுயற்சி' என்பதை மட்டும் படக்குழு அறிவித்தது. இன்னொரு பக்கம் அஜித்தும் அடுத்தடுத்து பைக் டூர் செல்வதில் பிஸியாக இருந்தார்.
இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என லைகா சுபாஸ்கரன் அப்டேட் கொடுத்தார். சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், விடாமுயற்சி எங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என்றும், விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளதாகவும் கூறியிருந்தார். ஆனாலும், கடந்த ஒருவாரமாக விடாமுயற்சி அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோவில் அவர் வாடிய முகத்துடன் இருப்பது வைரலாகி வருகிறது.
எப்போதும் மீடியா வெளிச்சம் தன்மீது பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக கவனமாக இருப்பதே அஜித்தின் வழக்கம். ஆனால் தற்போது அவர் எங்கு சென்றாலும், ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்கிறார். அப்படி அவர் சமீபத்தில் எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது. கறுப்பு நிறத்தில் ஒயிட் டாட்ஸ் வைத்த சட்டையுடன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார் அஜித். அவரை சுற்றி சில ரசிகர்கள் நின்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த போட்டோவில் அஜித்தின் முகம் வாடி போய் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். கொஞ்சமாக சிரிப்பு உள்ளுக்குள் ஏதோ கவலையுடன் இருப்பதாக தெரிகிறது. மேலும் 'மனதை தேத்திக்க வேண்டியதான்" எனவும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். விடமுயற்சி திரைப்படம் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை என்பதால், அஜித் சோகமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











