Ajith: "அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்ல அஜித் அப்படியே சொன்னார்..” அம்பிகா சொன்ன ரகசியம்!

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அஜித்துடன் நடித்தது பற்றி 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த அம்பிகா மனம் திறந்துள்ளார்.

அமர்க்களம் படப்பிடிப்பில் நடந்த சம்பவம் பற்றி அவர் கூறியுள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 Ajith: Actress Ambika opens up about acting with Ajith in the Amarkalam Movie

அஜித்தின் இன்னொரு முகம்
கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான அஜித்துக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தனது ரசிகர் மன்றங்களை அஜித் கலைத்துவிட்ட போதும், அவரது படங்களுக்கு இப்போதும் சிறப்பான ஓபனிங் கிடைக்கிறது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு, பொங்கல் பாக்ஸ் ஆபிஸில் விஜய்யின் வாரிசு படத்தை ஓவர்டேக் செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. விடாமுயற்சி ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் அஜித் பற்றி நடிகை அம்பிகா மனம் திறந்துள்ளார். 80களில் கோலிவுட்டையே அதிர வைத்தவர் அம்பிகா. சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், கேப்டன் விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போதும் சில படங்களில் கமிட்டாகியுள்ள அம்பிகா, அஜித்துடன் இரண்டு படங்களில் நடித்துள்ளார். உயிரோடு உயிராக, அமர்க்களம் என இரண்டு படங்களில் அஜித்துடன் நடித்துள்ள அம்பிகா, அவர் பற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமர்க்களம் படத்தில் அஜித்துக்கும் ஷாலினிக்கும் காதல் மலர்ந்தது எனக் கூறியுள்ள அம்பிகா, அவர் எப்போதுமே செம்ம ஸ்மார்ட் என்றுள்ளார்.

 Ajith: Actress Ambika opens up about acting with Ajith in the Amarkalam Movie

அமர்க்களம் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது, பேப்பரில் ஒரு செய்தி வந்திருந்ததாம். அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு குழந்தையின் சிகிச்சைக்காக பணம் தேவைப்படுகிறது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் பார்த்த அஜித் உடனடியாக தனது அலுவலகத்திற்கு போன் செய்துள்ளார். மேலும், உடனடியாக ஒரு தொகையை கூறி, அதை குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் கட்டிவிட சொன்னாராம் அஜித்.

அமர்க்களம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் செய்த இந்த உதவியை, அம்பிகா நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார். அவரை நினைக்கும் போதெல்லாம் இந்தச் சம்பவம் தான் நினைவில் வரும் எனவும், அஜித் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் எனவும் அம்பிகா வாழ்த்தினார். அம்பிகாவின் இந்த பேட்டியை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆரம்பம் முதலே அஜித் பலருக்கும் உதவி செய்துவருவதை வழக்கமாக வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X