»   »  'அஜீத்.. அதிமுக.. அம்மா அழைப்பு..' இந்த ரணகளத்திலும் இப்படி ஒரு குதூகலம் கேக்குதா ரசிகாஸ்?

'அஜீத்.. அதிமுக.. அம்மா அழைப்பு..' இந்த ரணகளத்திலும் இப்படி ஒரு குதூகலம் கேக்குதா ரசிகாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

எரியிற வீட்ல பிடுங்கன வரைக்கும் லாபம்... இப்படி ஒரு பழமொழியை தமிழனைத் தவிர யாரும் கண்டுபிடிச்சிருக்க முடியாது. ஏன்னா... குணம் அப்படி!

பதவியில், அதிகாரத்திலிருக்கும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருக்கும்போது, அந்த இடத்துக்குப் போவது எப்படி என குறுக்கு வழியில் ரூட் போடுவது நம்மாட்களுக்கு கைவந்த கலை.

Ajith, ADMK and Ajith fans

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் அப்பல்லோவில் சிகிச்சைப் பெற்று வரும் இந்த நேரத்தில் சில ரசிக அதிகப்பிரசங்கிகள் ஒரு செய்தியை ஊதி ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர்.

மேட்டர் இதுதான்...

'அப்பல்லோவில் இருக்கும் முதல்வர் அம்மா திடீரென்று நடிகர் அஜீத் குமாரை தன்னை வந்து பார்க்குமாறு அழைத்தார். அஜீத்தும் ரகசியமாகப் பார்த்தார். அப்போது, அதிமுகவை பார்த்துக் கொள்ளுமாறும், தான் சரியாகி வரும்வரை அஜீத்திடமே அனைத்துப் பொறுப்புகளையும் அம்மா கொடுக்கத் தயாராகிவிட்டார். காரணம், அஜீத் மீது அம்மாவுக்கு அப்படி ஒரு நம்பிக்கை..'

இந்த செய்தியை அஜீத்தின் ரசிகமணிகள் ஆளாளுக்கு ஜோடித்து பரப்ப, அதை உண்மையென நம்பி கேரளா மீடியாக்கள் செய்தி வெளியிட்டும் உள்ளன.

'அடப் பாவிகளா... விட்டா நீங்களே உயில் எழுதிக்குவீங்க போல... அம்மா திரும்ப வரும்போது இருக்குடி ஆப்பு' என கடுகடுக்கிறது அப்பல்லோ முன்பாகக் குவிந்திருக்கும் அதிமுக ரரக்கள்!

English summary
Some of the fans spreading rumours that CM Jayalalithaa has met Ajith secretly and discussed over the future of ADMK.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil