சமுத்திரகனிக்கு அட்வைஸ் செய்த அஜித்.. ஓஹோ இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: அஜித்குமார் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் முதல் சிங்கிள் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. விடாமுயற்சி படத்தை முடித்திருக்கும் அவர் குட் பேட் அக்லி படத்தின் பணிகளையும் முடித்துவிட்டார். இந்தச் சூழலில் இயக்குநர் சமுத்திரகனிக்கு நடிகர் அஜித்குமார் செய்த அட்வைஸ் குறித்து தெரியவந்திருக்கிறது.
அஜித்தின் நடிப்பில் துணிவு படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. துணிவு படத்தின்போதே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். ஆனால் அதிலிருந்து விக்னேஷ் சிவன் வெளியேறியதைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் படம் உருவானது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது.

ஜனவரி 10ல் ரிலீஸ்: இந்தப் படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்தன. ஒருகட்டத்தில் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் தகவல்கள் கசிந்தன. இதனால் ரசிகர்களுக்கு சோகம் ஏற்பட்ட சூழலில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா தெரிவித்தார். அதுமட்டுமின்றி படத்தின் டீசரும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. படமானது ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்தப் படத்துக்கு போட்டியாக பாலாவின் வணங்கான், ஷங்கரின் கேம் சேஞ்சர் படங்களும் வருகின்றன.
முதல் சிங்கிள்: படத்திலிருந்து முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்புதான் வெளியானது. அதில் அஜித் மற்றும் திரிஷாவின் நடனமும், கெமிஸ்ட்ரியும் பக்காவாக இருந்தது என்று ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அதுமட்டுமின்றி அஜித்தின் நடனம் தனித்து தெரிந்தது என்றும்; செம ஸ்டைலிஷாக ஏகே இருந்தார் என்றும் புகழ்ந்து தள்ளினர். கண்டிப்பாக இந்தப் படம் அஜித் மற்றும் மகிழ் திருமேனி கரியரில் முக்கியமான படமாக அமைய வாய்ப்புகள் இருப்பதாகவும் திரைத்துறையினர் கூறுகிறார்கள்.
கதை திருட்டு: இப்படி படத்துக்கு ஒருபக்கம் எதிர்பார்ப்புகள் அதிகரிக்க மறுபக்கமோ பிரேக் டவுன் என்ற படத்தின் காப்பிதான் இது என்று சர்ச்சைகள் எழுந்தன. மேலும் அந்தப் படக்குழு லைகா நிறுவனத்திடம் 100 கோடி ரூபாய்வரை நஷ்ட ஈடு கேட்டதாகவும் 30 கோடி ரூபாய் ஃபைனல் ஆகியிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி படத்தின் டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டார் அஜித்குமார்.
அஜித் செய்த அட்வைஸ்: இந்நிலையில் அஜித் குறித்து சமுத்திரகனி பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் அளித்த ஒரு பேட்டியில், "துணிவு படத்தில் நானும் அஜித்தும் சேர்ந்து நடித்தோம். அப்போது அவர் என்னிடம், 'நீங்கள் பைக்கை எடுத்துக்கொண்டு தனியாக ஒரு ட்ரிப் செல்லுங்கள். உங்களை யார் என்றே தெரியாதவர்கள் இருக்கும் ஊருக்கு செல்லுங்கள். அப்போது நீங்கள் உங்களையே உணர்ந்துகொள்ளலாம்' என்று கூறியதாக தெரிவித்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமுத்திரகனிக்கே ஏகே அட்வைஸ் செய்திருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











